Friday, July 16, 2021

Our Lady of Mount Carmel - தூய கார்மேல் அன்னை

 பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி - தூய கார்மேல் அன்னை



 Download pdf 

முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் பேரன்பிற்குரியவர்களே, இன்று நாம் தூய கார்மேல் அன்னையின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கார்மேல் என்பதற்கு எபிரேய மொழியில் “அழகிய தோட்டம் என்பது பொருள். இந்த மலையில்தான் இறைவாக்கினர் எலியா போலி இறைவாக்கினர்களுக்கு உண்மை இறைவன் யார் என்பதை வெளிக்காட்டினார். எலியாவைப் பின்பற்றி நிறைய துறவிகள் இந்த மலைக்குச் சென்று கார்மேல் மலைத் தூய துறவிகள்" என்ற நிலையில் வாழ்ந்து வந்தனர். கார்மேல் சபையின்

தலைமைத் தந்தையாக இருந்த புனித சைமன் ஸ்டோக் என்பவருக்கு அன்னை மரியா 1251 ஜூலை 15 அன்று காட்சி கொடுத்தார். அக்காட்சியில் சைமனிடம் உதரியம் ஒன்றைக் கொடுத்த கன்னிமரியா இது கார்மேல் துறவிகளுக்கு வழங்கப்படும் தனிச்சலுகை இதைப் பக்தியோடு அணியவர்கள் இம்மையிலும், மறுமையிலும் எவ்விதத் துன்பத்திலும் நரக நெருப்பிலும் அல்லலுற மாட்டார்கள் என்றார். அன்னை காட்சி கொடுத்த அந்த நாளே கார்மேல் மலை புனித கன்னிமரியின் விழாவுக்கான நாளாக குறிக்கப்பட்டது இவ்விழாவை முதலில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் 1587ம் ஆண்டு

அங்கீகரித்தார். திருத்தந்தை ம் ஆசிரவாதப்பா இலத்தின் திருச்சபை முழுமைக்கும் காரமேல் மலைம் புனித கன்னிமரியின் திருவிழாவைக் கொண்டாட 1726 செப்டமியர் அன்று வழிவகுத்தார். உத்திரியத்தை அணிவோரின் ஆன்மாவை அழியவிடாமல் அன்னை பாதுகாக்கிறார். கடவுள்

நல்ல தந்தையாக இருந்து ஆதாம் ஏவாளுக்கு ஆயை தந்ததுபோல அன்னை உத்திரியத்தின் வழியாக விண்ணக ஆசியையும் அருளையும் பெற்றுத்தரும் வாய்க்காலாக திகழ்கிறது. நாம் வெறுமனே தத்தரியத்தை தரித்தால் மட்டும் போதாது உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ முயற்சி எடுக்கும் போதுதான் அன்னையின் ஆசி பெற முடியும் என்பதை உணர்ந்து பகதி பற்றுதலுடனும் அரப்பண உணர்வுடன் இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுத்து இப்பலியில் செபிப்போம்.


முதல் வாசகம்

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 10-13

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாய் இருங்கள்; ஏனெனில் அவர் தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்            லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55

பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.


47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ℟

48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.   ℟

50-51 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.   ℟

52-53 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.   ℟

54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.      ℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


தம் சீடர் பக்கம் கையை நீட்டி, என் தாயும் சகோதரர்களும் இவர்களே என்றார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50


அக்காலத்தில், மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


மன்றாட்டுக்கள்

1. வாக்குறுதிகளை நிறைவேற்றும் வானகத் தந்தையே, எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர் நீர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், அதனைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வையும், பிறர் வாழ்வையும் மேம்படுத்திக்கொள்ள முன்வருபவர்களாகவும் விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லா நலன்களுக்கும் ஊற்றான இறைவா இன்று தங்களின் உரிமைக்கான போராட்டங்களில் மக்கள் தங்களையே அர்ப்பணித்து ஈடுபடவும், தீங்கை எதிர்த்து போராடவும், ஆட்சியாளர்கள் மக்களின் குரலுக்குச் செவிமடுத்து அவர்தம் குறைகளைத் தீர்க்கவும் வேண்டிய தாராள மனதைத் தந்தருள வேண்டுமென்று உமமை மன்றாடுகிறோம்

3. அன்னை மரியாவை தாயாகத் தந்த இறைவா நாங்கள் உதரியத்தையோ, சுரூபத்தைபோ தரித்திருந்தால் மட்டும் போதாது மாறாக உண்மையான சிறிர்பதவ வாழ்வு வாழத் தேவையான அனைத்து வரங்களையும் எங்களுக்கு அளித்து ஆசிர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

4 வாழ்வின் ஊற்றே இலாபககோத்துக்கொண்ட அனைத்து குடும்பங்களையும் அன்னைபாதம் படைக்கின்றோம். குடும்பங்களில் அன்பும் அலை நம்பிக்கையும் பற்றுறுதியும் பிரமாணிக்க உணர்வும், கீழ்ப்படிதலும் நிறைந்து விளங்க கடையாக உள்ள அனைத்துக் கட்டுகளையும் உடைத்தெறியவமை உமமை மன்றாடுகிறோம்.

   


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...