Showing posts with label அப்போஸ்தலர்கள். Show all posts
Showing posts with label அப்போஸ்தலர்கள். Show all posts

Tuesday, November 29, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-11-2022)

 

புனித அந்திரேயா, திருத்தூதர்

விழா


முதல் வாசகம்

அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18

சகோதரர் சகோதரிகளே,

‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், “அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். “ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்” என்று எழுதியுள்ளது அல்லவா?

ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதைக் குறித்தே எசாயா, “ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?” என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், “அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4ab (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

3
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4ab
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22

அக்காலத்தில்

இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்தியால் மனிதர்களைப் பிடிப்போமா? 


இன்று நாம் திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவினைத் திருஅவையோடு இணைந்து கொண்டாடுகிறோம்.

இயேசுவால் முதன்முதலில்  அழைக்கப்பட்ட சீடர்களில் ஒருவர் இவர் என்பதும்  இயேசுவின் பணிவாழ்வில் அவருடன் இணைந்திருந்தவர் என்பதும் நாம் அறிந்ததே.மேலும் இவர் திருத்தூதரான பேதுருவின் சகோதரரும் ஆவார். உயிர்த்த இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில் தனக்கே உரிய பங்களிப்பை அளித்தவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தகைய திருத்தூதரின் விழாவில் நற்செய்தியைப் பறைசாற்றி எவ்வாறு மற்றவரை கடவுள் பால் ஈர்ப்பது என்பதைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.


இன்றைய நற்செய்தியில் கலிலேயக் கடலில் வலைவீசிக்கொண்டிருந்த சீமோன் மற்றும் அந்திரேயாவிடம் "என் பின்னே வாருங்கள் .உங்களை மனிதர்களைப் பிடிப்பவராக்குவேன்" என்று இயேசு கூறி தன் அழைப்பு எனும் மேலான கொடையை அவர்களுக்கு வழங்குகிறார்.அவர்களும் உடனடியாக இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். இதன் உண்மையான பொருள் என்ன? கடலில் வலை வீசினால் மீன்கள் கிட்டும். அதைப்போல மனிதர்களைப் பிடிக்க நாம் எத்தகைய வலையை வீச வேண்டும் என்பதைக்குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இயேசுவின் பணிவாழ்வின் போது அவர் மக்களைத் தன்பால் ஈர்த்தார். அதற்காக அவர் பயன்படுத்திய கருவிகள் என்ன என்று ஆராய்ந்தால் அவை அன்பு,இரக்கம், மன்னிப்பு, அமைதி,பகிர்வு, பரிவு  போன்றவையே. சுருங்கக் கூறின் நற்செய்தி. இறையாட்சியில் அனைவருக்கும் பங்குண்டு என்ற நற்செய்தியை வார்த்தையாலும் வாழ்க்கையாலும் போதித்ததால் மனிதரைப் பிடிப்பவரானார் இயேசு. செல்லுமிடமெல்லாம் மக்கள் அவரைத் தொடர்ந்தனர். அவருடைய சொற்களைக் கெட்டு, செயல்களைக் கண்டு அதன்மூலம் இறையாட்சியை உணர்ந்தனர்.


 இயேசு எவ்வாறு தன் சொல் செயல் பணிவாழ்வால் நற்புச்செய்தியைப் பறைசாற்றி மக்களை கடவுளுக்காகத் திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரோ அவ்வாறே நற்செய்திப் பணியால் கடவுள் பால் மனிதரை ஈர்க்க அழைக்கப்பட்டவர்களே திருத்தூதர்கள். அதே பணியைத் தொடரவே கிறிஸ்தவர்களாகிய நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.

நாம் எவ்வாறு மனிதர்களைப் பிடிக்கப்போகிறோம்? இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நம் வாயால் அறிக்கையிட்டு, நம் அன்பாலும்,இரக்கத்தாலும்,பகிர்தலாலும்,

மன்னிப்பாலும், ஒருவர் மற்றவரை சமத்துவத்தோடும், சகோதரத்தோடும் ,

குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் பண்பாலும், துன்ப நேரத்தில் உடனிருப்பாலும், ஆற்றித் தேற்றும் குணத்தாலும் , மனித நேயத்தாலும் அவரைப் போல வாழ முழுமுயற்சி எடுக்கும் போது நாமும் கடவுளுக்காக மனிதரைப் பிடிப்பவராகிறோம்.


 இயேசு ஆண்டவர் என்பதை மனதார நம்பி வாயார அறிக்கையிட்டு கடவுளுக்கு ஏற்புடையவராகவும் மீட்பைச் சொந்தமாக்குபவராகவும் நாம் வாழ வேண்டுமென புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் கூறுவதுதான் நமக்கு முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது.இத்தகைய வாழ்வுதரும் நற்செய்தியானது பாரபட்சமின்றி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்துவதாக இவ்வாசகம் அமைகிறது.


ஆம் நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்ற வார்த்தையை உண்மையாக்கும் விதமாக கிறிஸ்து பிறப்புக்காக நம்மைத் தயார் செய்யும் வேளையில் அவரே ஆண்டவர் என்பதை உள்ளூர நம்பி அறிக்கையிடுவோம். திருத்தூதர்களைப் போல வார்த்தையாலும் வாழ்க்கையாலும் நற்செய்தியை அறிவித்து மனிதர்களை பிடிப்பவராவோம். நம் வாழ்வை நெறிப்படுத்தி மற்றவரையும் கடவுள் பால் ஈர்ப்போம். அதற்கான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா அன்று திருத்தூதர்களை அழைத்தது போல இன்று எங்களையும் உம் பணிக்காய் அழைத்துள்ளீர். எம் வாழ்வாலும் வார்த்தையாலும் நற்செய்தியை அறிவித்து உம்பால் மனிதரை ஈர்க்க எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 30)
✠ புனிதர் அந்திரேயா ✠
(St. Andrew)

திருத்தூதர்/ முதல் அழைப்பு பெற்றவர்/ கிறிஸ்துவை அறிமுகம் செய்தவர்:
(Apostle/ The First-Called/ Introduced Jesus)
பிறப்பு: கி.மு. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு
பெத்சாய்தா, கலிலேயா, ரோம பேரரசு
(Bethsaida, Galilee, Roman Empire)
இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி
பட்ராஸ், அச்சையா, ரோம பேரரசு
(Patras, Achaia, Roman Empire)
ஏற்கும் சபை/ சமயம்: அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்:
டூமோ கதீட்ரல், அமல்ஃபி, இத்தாலி
(Duomo Cathedral in Amalfi, Italy)
செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல், பட்ராஸ், கிரீஸ்
(St. Andrew's Cathedral, Patras, Greece)
செயிண்ட் மேரீஸ் கதீட்ரல், எடின்பர்க், ஸ்காட்லாந்து
(St. Mary's Cathedral, Edinburgh, Scotland)
செயிண்ட் ஆண்ட்ரூ மற்றும் செயின்ட் ஆல்பர்ட் ஆலயம், வார்சாவ், போலந்து
(The Church of St. Andrew and St. Albert, Warsaw, Poland)
நினைவுத் திருவிழா: நவம்பர் 30
சித்தரிக்கப்படும் வகை:
'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்
பாதுகாவல் :
ஸ்காட்லாந்து, உக்ரைன், ரஷியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், ரூமேனியா, மீனவர், பாடகர், கர்ப்பிணிப் பெண்கள், இறைச்சி வெட்டுபவர்கள், கயிறு நெய்யும் தொழிலாளி, சைப்ரஸ், பட்ராஸ், பரான்ஹேக்கின் மறைமாவட்டம் (Diocese of Parañaque), அமாஃல்பி (Amalfi), லுக்கா (மால்டா) மற்றும் புருஸ்ஸியா (Luqa (Malta) and Prussia), விக்டோரியா மறைமாவட்டம் (Diocese of Victoria), பண்ணைத் தொழிலாளர்கள்
புனிதர் அந்திரேயா அல்லது புனிதர் பெலவேந்திரர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்கள்) ஒருவரும், சீமோன் பேதுருவின் சகோதரரும், ஆவார். கிரேக்க மொழியில், 'ஆண்ட்ரெஸ்' என்றால் 'ஆண்மை' அல்லது 'பலம்' அல்லது 'வலிமை' என்பது பொருள். எனவேதான், தமிழில் இவரது பெயரை, 'பெலவேந்திரர்' என அழைக்கின்றோம்.
இவரைப் பற்றிய குறிப்பு, நான்கு நற்செய்தி நூல்களிலும் வருகிறது. ஒத்தமைவு நற்செய்திகளில் (மாற்கு, மத்தேயு, லூக்கா) இவர் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் என்றும், சீமோன் பேதுருவின் சகோதரர் என்றும், இயேசுவின் முதற்சீடர்கள் இருவரில் ஒருவர் என்றும் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், யோவான் நற்செய்தியில் இவரைப் பற்றிய குறிப்பு மூன்று இடங்களில் வருகிறது:
ஒன்று:
திருமுழுக்கு யோவானின் சீடர்களுள் ஒருவராக இருந்த அந்திரேயா (காண்க. யோவான் 1), 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் கட்டளை கேட்டு அவருடன் சென்று தங்குகிறார். பின், தன் சகோதரர் பேதுருவையும் அழைத்துச் சென்று, இயேசுவிடம் அறிமுகம் செய்கின்றார்.
இரண்டு:
ஐந்து அப்பங்கள் ஐயாயிரம் பேருக்குப் பகிரப்படும் நிகழ்வில் (காண்க. யோவான் 6), 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான்' என்று இளவல் ஒருவரை இயேசுவுக்கு அறிமுகம் செய்தது இவரே.
மூன்று:
கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விரும்பியபோது (காண்க. யோவான் 12), அவர்களை, பிலிப்புடன் இணைந்து, இயேசுவிடம் கூட்டிச் சென்றார்.
கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்த இவர், புனிதர் சீமோன் பேதுருவின் மூத்த சகோதரர் ஆவார். மீன்பிடி தொழில் செய்துவந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்த இவர், பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு, திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39).
அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே (யோவான் 6:8). கோவிலின் அழிவை முன்னறிவித்தபோது அழிவு எப்போது வரும்?” என கேட்டவரும் இவரே. ஆண்டவரின் இறுதி இராவுணவின்போது இவருமிருந்தார். இறுதிகால இயேசுவின் இரண்டாம் வருகையின் அறிகுறி என்னவென்று இயேசுவிடம் கேட்பதற்காக ஒலிவ மலைக்கு (Mount of Olives) வந்த நான்கு சீடர்களுள் இவரும் ஒருவராவார்.
புனிதர் அந்திரேயா, “மத்திய யூரேசியாவின்” (Central Eurasia) பிராந்தியமான “ஸ்கித்தியாவில்” (Scythia) பிரசங்கித்தார். கிரேக்க புராணங்களில் அறிவுமிக்க வயதான “நெஸ்டார்” (Nestor) எனும் அரசனின் காலக்கிரமமாகத் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்பின்படி, கருங்கடல் (Black Sea), “டினெபர் நதி” (Dnieper river) மற்றும் “உக்ரெய்ன்” (Ukraine) நாட்டின் தலைநகரான “கியேவ்” (Kiev) வரை அவர் பிரசங்கித்ததாகக் கூறுகிறார். அங்கு அங்கிருந்து வடமேற்கு ரஷியாவின் நகரான “நோவ்கோரோடு” (Novgorod) சென்றார். எனவே, அவர் “உக்ரேய்ன்” (Ukraine), “ரோமானியா” (Romania) மற்றும் “ரஷ்யாவின்” (Russia) பாதுகாவலர் ஆவார். பாரம்பரியங்களின்படி, பின்னாளில் கி.பி. 38ம் ஆண்டுகளில், “கான்ஸ்டண்டிநோபில் மற்றும் இஸ்தான்புல்” (Constantinople and Istanbul) என்று அறியப்பட்ட, பண்டைய கிரேக்க நகரான “பைசான்டியம்” (Byzantium) கண்டடைந்தார். ரோம் கிறிஸ்தவ திருச்சபையின் மூன்றாம் நூற்றாண்டின் மிக முக்கிய இறையியலாலர்களில் ஒருவரான “ஹிப்போலிட்டஸ்” (Hippolytus of Rome) என்பவரின் கூற்றின்படி, அந்திரேயா பண்டைய தென்கிழக்கு ஐரோப்பாவின் புவியியல் மற்றும் சரித்திரவியல் பகுதியான “திரேஸ்” (Thrace) எனும் பகுதிகளிலும் பிரசங்கித்தார்.
அந்திரேயா, கிரேக்கத்தின் பிராந்தியப் பகுதிகளுள் ஒன்றான “அச்சேயா” (Achaea) எனுமிடத்திலுள்ள “பட்ராஸ்” (Patras) நகரில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அதேவிதமான சிலுவையில் தாமும் அரையப்பட தாம் தகுதியானவனில்லை என்ற காரணத்தால், அவரே “X” வடிவ சிலுவையில் தம்மை அரையுமாறு வேண்டினார் என்றும் கூறப்படுகிறது. அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். பட்ராசில் (Patras) உள்ள புனித அந்திரேயா ஆலயத்தில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.
நன்றி : திரு.புஷ்பராஜா
---------------------------------------------------------
† Saint of the Day †
(November 30)
✠ St. Andrew the Apostle ✠
Apostle:
Born: 5 BC
Galilee, Roman Empire
Died: Mid - to late 1st century
Patras, Achaia, Roman Empire
Venerated in: All of Christianity
Major shrine:
Duomo Cathedral in Amalfi, Italy, St Andrew's Cathedral, Patras, Greece; St Mary's Cathedral, Edinburgh, Scotland; the Church of St Andrew and St Albert, Warsaw, Poland.
Feast: November 30
Patronage:
Scotland, Barbados, Georgia, Ukraine, Russia, Sicily, Greece, Cyprus, Romania, Patras, Burgundy, San Andrés (Tenerife), Diocese of Parañaque, Telhado, Amalfi, Luqa (Malta) and Prussia; Diocese of Victoria; Fishermen, Fishmongers and Rope-makers, Textile workers, Singers, Miners, Pregnant women, Butchers, Farmworkers, Protection against Sore Throats, Protection against Convulsions, Protection against Fever, Protection against Whooping Cough
Saint Andrew the Apostle, also known as Saint Andrew and referred to in the Orthodox tradition as the First-Called was a Christian Apostle and the brother of Saint Peter.
St. John the Baptist was on the banks of the Jordan with two disciples when he saw Our Lord passing. He pointed to Him and said: ‘Behold the Lamb of God.’ Andrew and the other disciple followed Our Lord and remained with Him that day.
Andrew at once recognized Jesus as the Messiah and hastened to introduce his brother Peter to Him (John 1:41). Andrew told Simon Peter: “We have found the Messiah.” And he brought Peter to Our Lord. When Christ beheld him, He said, “Thou art Simon, the son of Jonas: thou shall be called Cephas, that is, rock.” And so, St. Andrew had the glory of presenting to Our Lord St. Peter, upon whom the Church would be built.
Our Lord called Peter and Andrew to be Apostles one day when the two were fishing in the Sea of Galilee. He came up upon them casting a net into the sea and said to them, “Come with me, and I will make you fishers of men.” At once they left their nets and followed Him.
St. Andrew had a great love for the cross. As soon as he saw the cross on which he would be crucified, he saluted it with these words:
“O most beautiful cross that was glorified by carrying the body of Christ! Glorious cross, sweetly desired, ardently loved, always sought, and finally prepared for my heart that has so long awaited you. Take me, o cross! Embrace me. Release me from my life among men. Bring me quickly and diligently to the Master. Through you He will receive me, He, Who through you has saved me.”
He remained two days hanging on the cross, preaching to the people. These were his last words before he died:
“Lord, eternal King of glory, receive me hanging from the wood of this sweet cross. Thou who art my God, whom I have seen, do not permit them to loosen me from the cross. Do this for me, O Lord, for I know the virtue of Thy Holy Cross.”
Comments:
It is impossible to have more beautiful prayers than these. Let me comment on the lines of the first prayer.
The first two sentences – “O most beautiful cross that was glorified by carrying the body of Christ! Glorious cross, sweetly desired, ardently loved, always sought, and finally prepared for my heart that has so long awaited you” – show that St. Andrew had known for a long time that he would be a martyr. He had meditated on it in relation to the Passion of Our Lord Jesus Christ. He entirely understood and loved the hour of his supreme suffering. He completely accepted the chalice God had prepared for him to drink.
The cross was a symbol of punishment and was reserved for criminals. But for St. Andrew, it was a “most beautiful” thing because it had been “glorified by carrying the body of Christ.”
Then, he added that he had “sweetly desired it.” With this, one understands that for years he had prepared himself to offer this disinterested holocaust: to be killed for the love of Our Lord, to allow himself be consumed and spent like the perfume that Mary Magdalene spilt to honour Our Lord. There was no practical goal in those acts of homage. They were sacrifices made for no other reason than to please God: to expend precious things in the manifestation of love for Him. Even if his sacrifice would not produce a good for souls and a humiliation for the enemies of the Church, St. Andrew wanted to die a martyr to prove how much he loved Our Lord. This is why he said he had “sweetly desired” to be crucified. The words express the splendour of the soul of a martyr.
St. Andrew continued by saying that he had “ardently awaited” the cross. Today men flee far from any kind of suffering, any kind of fight against their own passions, any kind of renunciation. For them to live is to enjoy a good life. St. Andrew, however, ardently awaited his own cross because he understood that what counts in life is not the pleasure he has, but the sacrifice he makes. This is what gives meaning to life. Therefore, the truly supernatural man is a friend of the cross, as St. Louis Grignion de Monfort said so well.
St. Andrew not only accepted the crosses given him during his life, but he looked for them. This is clear when he said that he had “always sought” sacrifice. Then, in the hour of his martyrdom, he had that marvellous reaction – he said that his “heart had long-awaited” the crucifixion. Which one of us can say a thing like that? What a sublime courage St. Andrew had in saying these words, which, however, came to his lips naturally and with complete serenity because he had always lived in preparation for that.
Our Lord said that there is no greater friend than one who would give his life for the other. No one can give a greater proof of friendship with Our Lord than to desire the cross like St. Andrew did.
He continued: “Take me, o cross! Embrace me. Release me from my life among men. Bring me quickly and diligently to the Master. Through you He will receive me, He, Who through you has saved me.”
Can any soul be more prepared for the beatific vision than one who would make this prayer at the hour of his death?
He remained two days crucified. While he was on the cross he was teaching the people who watched him die. How priceless those teaching were! What cathedra could ever be more sublime to teach people from?
St. Andrew expired with the words of his second prayer. I believe that only the death of Our Lord was more beautiful than his.
Now, after contemplating the height of that sacrifice, you may consider the descent experienced today: the head of St. Andrew that for more than 500 years had been one of the most precious treasures of St. Peter’s Basilica, was given this year (1964) by Paul VI to the Schismatics of Greece. That is, handed over to the same Schismatics who hate the Petrine Primacy, deny Papal Infallibility and the Immaculate Conception of Our Lady, among many other Catholic doctrines.
When one reads about the life of St. Andrew, it is normal is to say that it is part of the past. But it is not true, the history of St. Andrew continues today in this distressing episode.

What should we ask St. Andrew on his feast day? I suggest asking him to avenge the glory of the Church and his glory. To not permit that his head remains in Schismatic hands for long. But above all, we should ask him to intercede so that this situation in the Church will not continue for a long time. The delivery of his head is a symbol of a thousand other things that are being given away.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, September 20, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (21-09-2022)


 † இன்றைய புனிதர் †



(செப்டம்பர் 21)
✠ புனிதர் மத்தேயு ✠
(St.Matthew)
திருத்தூதர், நற்செய்தியாளர், மறைசாட்சி:
(Apostle, Evangelist, Martyr)
பிறப்பு: ---
லெவி
(Levi)
இறப்பு: ----
ஹியேராபொலிஸ் அருகே அல்லது எத்தியோப்பியா
(Hierapolis or Ethiopia)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglicanism)
லூத்தரன் திருச்சபை
(Lutheran Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
எதிர்த் திருச்சபைகள் அனைத்தும்
(All the Protestant Churches)
முக்கிய திருத்தலங்கள்:
சலெர்னோ, இத்தாலி
நினைவுத் திருவிழா:
செப்டம்பர் 21 (மேலைத் திருச்சபை)
நவம்பர் 16 (கீழைத் திருச்சபை)
பாதுகாவல்:
கணக்காளர்கள், சலெர்னோ (Salerno), இத்தாலி, வங்கியாளர்கள், வரி வசூலிப்பவர்கள், நறுமணப்பொருள், அரசு ஊழியர்கள்
திருத்தூதர் புனிதர் மத்தேயு, இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.
அடையாளம்:
இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் (மத்தேயு 9:9).
கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார்
(மத்தேயு 10:3).
மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன.
மாற்கு (2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
ஆரம்ப நாட்கள்:
அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார்.
இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மாற்கு 2:16-17)
மத்தேயுவின் பணி:
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
மத்தேயு நற்செய்தி:
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூத கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது.
இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூத கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூத கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20).
இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.
ஆசிரியர்:
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.
சூழல்:
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.
நினைவு:
மத்தேயு கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்தவ பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார். இவரது விழா, மேலைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 21ந்தேதியும், கீழைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 16ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இவரது திருப்பண்டங்கள் இத்தாலியின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.
மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில் திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான சிறகுள்ள மனிதனோடு சித்தரிக்கப்படுகிறார்.
நன்றி : திரு புஷ்பராஜா
----------------------------------------------------------------------
† Saint of the Day †
(September 21)
✠ St. Matthew the Apostle ✠
The Evangelist of the “Kingdom of God”:
Born: 1st century AD
Capernaum
Died: 1st century AD
near Hierapolis or Ethiopia, relics in Salerno, Italy
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Churches
Eastern Catholic Churches
Oriental Orthodox Churches
Church of the East
Anglican Communion
Lutheranism
Feast: September 21
Matthew, also known as Levi, was a Jew who collected taxes for the Romans at Capernaum in Galilee. Here Jesus met him and called him to be an apostle (Luke 5:27-28). He is venerated as the author of the first gospel which highlights Jesus’ role as Messiah and underlines the presence of the kingdom of God in the Church. His collection of Jesus’ parables on the Kingdom of God is outstanding in theology, spirituality as well as in linguistic excellence. St. Matthew is known to us principally as an Evangelist. His gospel appears as the first gospel in the New Testament and it is very elaborate on Jesus’ teachings on Discipleship. His Gospel was written in Aramaic, the language that our Lord Himself spoke. Surely, he was one of the few apostles who were educated and had a position in society.
At the time that Jesus summoned him to follow Him, Matthew was a Publican, that is, a tax-collector for the Romans. His profession was hateful to the Jews because it reminded them of their subjection; the publican, also, was regarded by the Pharisees as the typical sinner. They were considered to be traitors of the people who collaborated with the colonial regime to robe and persecute their own.
Out of respect for their fellow Apostle, neither other Evangelists Luke nor Mark mentions Matthew’s profession, because tax-collectors were hated and considered untouchable. But Matthew himself, however, reports that the Lord “saw a man called Matthew, sitting at the tax-booth”, that is a man already known as Matthew. As Saint John Chrysostom notes: “The apostle is deserving of admiration for not concealing his former life, and also giving his name, which the others concealed with another appellation”. The apostle does not deny his former life but acknowledges his alteration after being called. This demonstrates his humility, as well as his pride in becoming a disciple of the Lord.
Matthew lived and worked in Capernaum, a city that belonged to the jurisdiction of Herod, the Rome appointed ruler. As a clerk, he would have been in the service of some larger employer who had paid the tax revenues of the city, or even the region, to the Romans and then had the right to keep whatever monies he had raised, often believed to be gathered in unjust means. Matthew would certainly have known the Aramaic spoken by the Jews in the area, Greek and Latin as well.
The call of Matthew and his response is very dramatic. During his preaching journeys, Jesus found Matthew seated at his table of books and money, he looked at Matthew and said two words: "Follow me." This was all that was needed to make Matthew rise, leaving his pieces of silver and copper to follow Christ. His original name, "Levi," in Hebrew meant, "Adhesion" but Jesus began to call him, Matthew, meaning "Gift of God." Indeed Matthew is a gift of God to the Church and all to all the generations of Christians. He has given us a meticulous account of Jesus’ preaching, especially on the Kingdom of God. Jesus’ first sermon, “The Sermon on the Mount” (chapters 5 onwards) is indeed the summary of Jesus’ life and preaching.
Matthew is also the only Evangelist who shares the eight Beatitudes (the first part of the Sermon on the Mount) with his readers. His Gospel faithfully reports how Jesus described who will be truly blessed by God in the Kingdom and the attitudes and actions that are required for those who follow the new Law Jesus came to bring. In the subsequent chapters Matthew records in sumptuous words Jesus’ challenging messages on prayer, forgiveness, charity, treatment of other people, judgment, and practical things of daily life. If not for Matthew we would have missed many beautiful sayings of Jesus.
His work as a tax collector hounded his personality and his presence around Jesus. The only other outstanding mention of Matthew in the Gospels is the dinner party for Christ and His companions to which he invited his fellow tax-collectors. The Jews were surprised to see Jesus with a Publican, but Jesus explained that he had come "not to call the just, but sinners." St. Matthew represents all of us as we too are invited to the presence of Jesus despite our sinfulness.
One of the primary purposes of Matthew’s gospel was to convince the Jews that their anticipated Messiah had come in the person of Jesus. Jesus was the “Seed of Abraham”; Jesus was truly a descendant of Abraham, the Father of Faith. With his knowledge of other leading languages of his time, the customs and traditions of the Jewish people and his expertise on the Hebrew Scriptures (Old Testament), Matthew explains to his own Jewish people in their own native language how Jesus is the Messiah and how he has established the Kingdom of God.
Not much else is known about Matthew. After Jesus’ Ascension, Matthew, who is also an apostle preached the Gospel, as Jesus asked his disciples to do. It is believed that he established Christian communities in Egypt, Ethiopia, and other sections of the continent of Africa. Some legends say he lived until his nineties, dying a peaceful death, others say he died a martyr's death.
The symbol for Matthew’s Gospel is a man with wings. Matthew wrote about Jesus’ Incarnation and his Gospel makes clear that Jesus was true God and true man. Matthew is the patron saint of bankers because he dealt with money as a tax collector. But anyone who reads Matthew’s Gospel knows that money was not important to him. What was important was believing in and living as a follower of Christ. May St. Matthew helps us to remember that it is our faith in Jesus that makes us truly rich! His feast is celebrated on 21st September.
~ Rev. Father: Lazar Arasu SDB, Salesians of Don Bosco Missionary in Uganda


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (21-09-2022)

 புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் - விழா

செப்டம்பர் 21


திருப்பலி முன்னுரை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு - என்கிறது திருக்குறள்.

பற்றில்லாத பரமனின் பற்றினை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். பற்றில்லாமல் வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த மாதிரியாய் வாழ்ந்தவர்தான் இன்று நாம் விழா காணும் புனித மத்தேயு.

இயேசுவின் விருந்தில் பாவிகளுக்கு முதலிடம். இயேசுவின் இறையாட்சிப் பணியில் வரிதண்டுவோருக்குச் சிறப்பிடம். இயேசு நிறைவளிப்பவர். எனவே குறைவுற்றோரைத் தேடி நிறைவளிப்பது சரியானதே. நிலைகுலைந்திருப்போரை தன்னைப் பின்பற்றி வருமாறும், அவர்தம் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் உணவருந்தி மகிழ்வதும் அவர்களின் மீட்புக்கு உத்திரவாதம் தருகிறது. ஆம்,

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்ற ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுந்த வாழ்க்கையை வாழ்ந்தார்.

நற்செய்தியை வார்த்தையாலும் எழுத்தாலும் அறிவித்தார். "பாவத்தை வெறு! பாவியையோ அன்பு செய்!" என்பதை சொல்லால் அல்ல, செயலால் உணர்த்துகின்றார்

இயேசு. எல்லோரும் வெறுத்த நிலையில் இயேசுவின் அழைப்பு மத்தேயுவுக்கு அன்பையும் நல்ல புரிதலையும் கொடுத்த து. இதோ மத்தேயுவை அழைத்த இயேசு நாம் இருக்கும் நிலையிலே நம்மையும் அழைக்கின்றார். மனம் மாறியவர்களாய் அவரைப் பின் தொடரும் அருள் வேண்டி இப்பலியில் இணைவோம்.


மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


உமக்குத் திருப்பணி புரிய ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தவரே எம் இறைவா! திரு அவையினை வழிநடத்தும் திரு அவைப் பணியாளர்களை ஆசீர்வதியும். இவர்கள் தாங்கள் அழைக்கப்பட்டதன் மேன்மையை உணர்ந்து, உமது பிள்ளைகளாகிய எங்களை உமது அன்பின் வழியில் நடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


நேர்மையோடு மக்களினங்களை ஆளும் அரசரே எம் இறைவா! நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களை ஆசீர்வதியும். இவர்கள் ஏற்றத்தாழ்வு கருதாமல், எல்லா மக்களையும் சமநிலையில் பாவித்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


உமது திருமுக ஒளியை எம்மீது வீசச் செய்து எமக்கு ஆசி வழங்குபவரே எம் இறைவா! எம்மிடையே வாழும் இளைய தலைமுறையினரை ஆசீர்வதியும். இவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட மக்களின் துயரினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் தியாக உள்ளத்தினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


மத்தேயுவை அழைத்தவரே எம் இறைவா! எம்முடைய பாவங்களால் கடவுளை விட்டு வெகுதொலைவில் போன நாங்கள், உம்மிடத்தில் திரும்பி வந்து, உம்மீது உண்மையான அன்பினை வெளிப்படுத்த அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் வாசகம்

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13


சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13


அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


மறையுரைச் சிந்தனை

புனித மத்தேயு - செப்டம்பர் 21


பிரான்ஸ் நாட்டிலே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆயர் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த பிரசங்கியார்; பேச்சாளரும்கூட. ஒருமுறை அவரிடத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை என்ன?” என்று கேட்டார்”. அதற்கு அவர், “என்னிடத்தில் வந்து, ஒருசிலர் ‘நான் நன்றாக பிரசங்கம் செய்கிறேன், அது உள்ளத்தை உருக்குவதாக இருக்கிறது” என்று சொல்வார்கள். அதுவல்ல நான் செய்த சாதனை. மாறாக “உங்கள் பிரசங்கம் என்னை செயல்படத் தூண்டியது, செயலுக்கு இட்டுச் செல்வதாக இருக்கிறது” என்று சொல்கிறார்களே அதுதான் தான் செய்த மிகப்பெரிய சாதனை” என்றார்.

பிரசங்கம் – மறையுரை - நம்மை செயலுக்கு இட்டுச் செல்கிறபோதுதான் அது முழுமை பெறுகிறது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அப்படி உள்ளத்தை உருக்குவதாக மட்டும் அல்லாமல், நம்மை செயல்படத் தூண்டும் அளவுக்கு நற்செய்தியை எழுதிய ஒருவருடைய விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகிறோம். அவர் வேறு யாருமல்ல நற்செய்தியாளரான தூய மத்தேயுவே. மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவரது வாழ்வு, இவரது நற்செய்தி நூலின் சிறப்பு, இவர் நமக்கு உணர்த்தும் செய்தி என்று மூன்று பகுதிகளாக சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக மத்தேயுவின் வாழ்க்கை வரலாறு: மத்தேயு கலிலேயாவில் பிறந்தவர். ஏரோது அந்திபாசுவின் ஆளுகைக்குக் கீழ், வரிதண்டுபவராகப் பணியாற்றிவர். அக்காலத்தில் வரிதண்டுதல் என்பது யூதர்களால் நாட்டை காட்டிக்கொடுக்கும் அளவிற்கு குற்றமாக, இழிவாகக் கருத்தப்பட்டது. மேலும் இத்தகைய தொழிலில் ஈடுபடுபவர்கள் பாவிகளாகவே கருதப்படுவார்கள். வரிதண்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த மத்தேயுவும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இத்தகைய சூழலில் ஆண்டவர் இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னதும் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். அவரது உண்மையுள்ள சீடராக வாழ்கிறார். ஆண்டவர் இயேசுவின் உயிர்புக்குப் பிறகு இவர் மாசிதோனியா, எத்தியோப்பியா போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்ததாகவும், அங்கே மறைசாட்சியாக இறந்ததாகும் திருச்சபை மரபு சொல்கிறது. இது அவரது வாழக்கை வரலாறைக் குறித்த செய்திகளாகும்.

இரண்டாவதாக அவரது நற்செய்தியின் சிறப்பு: தூய மத்தேயு என்று சொல்கிறபோதே நமக்கெல்லாம் அவர் எழுதிய நற்செய்தி நூல்தான் நினைவுக்கு வருகிறது. அந்தியோக்கு நகரில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட அரமேய்க் மொழியில் எழுதப்பட்ட இந்நற்செய்தி “இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா” என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்நற்செய்தி நூல் “இறையாட்சி நூல்” என்று அழைக்கப்படுகிறது. காரணம் இறையாட்சி என்ற வார்த்தையானது 51 முறை வருகிறது. உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவூட்டுவதால், இது இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் நற்செய்தி நூல் எனவும் எனவும் அழைக்கப்படுகிறது.

மூன்றாவதாக அவர் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி வசூலித்துக்கொண்டு ஏறக்குறைய ஒரு பாவியைப் போன்றே வாழ்ந்துவந்தார். அப்படிப்பட்ட வேளையில்தான் இயேசு அவரை தன்பின்னே – மனமாறி – வர அழைக்கின்றார்.

கடவுள் மத்தேயுவை மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருமே மனந்திரும்பி வாழ அழைக்கின்றோர். இயேசுவின் முதல் போதனையே மனமாற்றமாகத்தான் இருக்கிறது. மாற் 1:15 ல் வாசின்றோம், “மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்று. எனவே நாம் நம்முடைய பழைய, பாவ வாழ்க்கையிலிருந்து மனமாறி புதிய வாழ்க்கை வாழுவோம்.

ஒரு வகுப்பிலே மாணவன் ஒருவன் இருந்தான். அவன் சகமாணவர்களது பொருட்களைத் திருடுவதையே தன்னுடைய வாடிக்கையாகக் கொண்டிருந்தான். வகுப்பு ஆசிரியருக்கு இச்செய்தி தெரிய வந்து, அவர் அவனுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னாலும்கூட, அவன் தன்னுடைய திருட்டை விட்டவனாக இல்லை. இது வகுப்பு ஆசிரியருக்கு இன்னும் மனவருத்தத்தைத் தந்தது.

ஒருநாள் ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து, கொஞ்சம் பணம்கொடுத்து வகுப்புத் தேவையான பொருட்களை வாங்கிவரச் சொன்னார். அவனும் கடைக்குப் போய், பொருட்களை எல்லாம் வாங்கிவந்து ஆசிரியரிடம் கொடுத்தான். அத்தோடு மீதிப் பணத்தையும் அவரிடம் கொடுத்தான்.

அதன்பிறகு அன்றைய நாளில் நடந்த வகுப்பில், ஆசிரியர் அந்த மாணவனை எழுந்து நிற்கச் சொல்லி, “இம்மாணவனைப் பொருட்களை வாங்கிவரச் சொன்னான். அவனும் நேர்மையாக நடந்துகொண்டு பொருட்களை வாங்கி வந்திருக்கிறான். மீதிப்பணத்தையும் கூட என்னிடத்தில் தந்திருக்கிறான். இந்த மாணவனைப் போன்று நீங்கள் அனைவரும் நேர்மையாக, உண்மையாக இருக்கவேண்டும்” என்று அறிவுரை கூறினார்.

இதைக் கேட்ட மாணவன் உள்ளம் குத்துண்டு போனான். ஏனெனில் அன்றைய நாளிலும் அவன் ஆசிரியர் கொடுத்த பணத்தில் மீதிப் பணத்தை சரியாகக் கொடுக்கவில்லை. எனவே அவன் தன்னுடைய தவறை நினைத்து அழுதான். ஆசிரியர் நமக்கு மீண்டும் மீண்டுமாக புத்திமதி சொல்லியும், நம்பிக்கை வைத்தும் நான் திருந்தவில்லையே என்று நினைத்து வருந்தினான். அன்றோடு அவன் தன்னுடைய திருட்டை விட்டுவிட்டு, நல்வழியில் வாழ்ந்தான்.

கதையில் வரும் ஆசிரியர் போன்றுதான் கடவுள் – ஆண்டவர் இயேசு – நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி வாழவேண்டும் என்று விரும்புகிறார். நாம் மத்தேயுவைப் போன்று மனந்திரும்பி வாழும்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆதலால் நற்செய்தியாளர் தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் கடவுள் அவர் வழியாக நமக்கு கொடுத்த நற்செய்தியின் நூலின் படி வாழ்வோம். மனந்திரும்பி வாழ்ந்து இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


மறையுரைச் சிந்தனை

புனித மத்தேயு - செப்டம்பர் 21


இன்று திருச்சபையானது தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. மத்தேயு என்றால் ‘கடவுளின் கொடை” என்பது பொருளாகும். மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய பெயருக்கு ஏற்றது போன்று கடவுளிடமிருந்து பெற்ற கொடையை எல்லா மக்களுக்கும் வழங்கினார். இவர் எழுதிய நற்செய்தி நூல் மிகவும் சிறப்பானது. பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ நெறியை இந்தியாவிற்கு அறிவிக்க வந்த தூய பிரான்சிஸ் சவேரியார் தன்னோடு மத்தேயு நற்செய்தியைத்தான் எடுத்து வந்தார் என்பது மத்தேயு நற்செய்தியின் சிறப்பு. மேலும் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள் தன்னுடைய போராட்டத்திற்கான உத்வேகத்தை ஆண்டவர் இயேசுவின் மலைபொழிவிலிருந்துதான் (மத்தேயு நற்செய்தியிலிருந்துதான்) பெறுகிறார் என்பது மத்தேயு நற்செய்தியின் கூடுதல் சிறப்பு.

இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இவரது வாழ்வும், இவரது விழாவும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மத்தேயுவைப் பற்றி அறிய முற்படும்போது இவர் இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் ஒருவர் (மத் 9:9) என்று தெரிகிறது. கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார் (மத்10:3).

மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. மாற்கு(2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிர்ப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.

அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மாற்கு 2:16-17)

புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.

சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.

இவரது வாழ்வையும், நற்செய்தி நூலையும் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம் இவரது விழா உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “கடவுள் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்” என்று படிக்கின்றோம். ஆம், இறைவனின் பணியை குறிப்பிட்ட மக்கள்தான் செய்யவேண்டும் என்றில்லை அல்லது இறைப்பணி குறிப்பிட்ட மக்களுக்கு உரியது என்று நினைப்பது தவறு. அப்பணியைச் செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு, எல்லாருக்கும் பங்கு உண்டு. தூய மத்தேயு வரிதண்டுபவராக/ பாவியாக இருந்தாலும் கடவுள் அவரைத் தன்னுடைய திருப்பணிக்கு அழைத்தார். எனவே நாம் இறைபணி எல்லாருக்கும் பொதுவானது என்ற உண்மையை உணர்ந்து கொள்வோம்.

அடுத்தாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று இரக்கத்தின் கருவிகளாக விளங்க வேண்டும். அதுதான் இந்த விழா உணர்த்தும் மேலான பாடமாக இருக்கின்றது. நாம் செலுத்தும் பலிகள், பூசைகள் அனைத்தையும் விட, ஒருவர் மற்றவரிடம் காட்டும் இரக்கம் மிகப்பெரியது.

பெருநகரில் வாழ்ந்துவந்த ஓர் இளைஞர்குலாம் மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா சென்றது. அங்கே அவர்களுக்கு மலையின் உச்சியில் ஒரு துறவுமடம் இருப்பதாகும், அங்கே சென்று வந்தால் புண்ணியம் கிடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டது. எனவே அவர்கள் அந்த துறவு மடத்திற்கு சென்றார்கள்.

அவர்கள் சென்ற நேரம் துறவுமடத்தில் ஒரே ஒரு துறவி மட்டும் இருந்தார். அவர் அவர்களுக்கு எல்லா இடங்களையெல்லாம் சுற்றிக்காட்டினார்; உண்பதற்கு உணவு கொடுத்தார். துறவி கொடுத்த விருந்தை அவர்கள் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அப்படியே பேசிக்கொண்டிருந்ததில் இரவு நேரம் நெருங்கி வந்துவிட்டது. அதனால் அவர் அவர்களை அங்கேயே தங்கச் சொன்னார். துறவியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர்கள் அந்த துறவு மடத்தில் தங்கினார்கள்.

சாம வேலையில் தூக்கத்திலிருந்து எழுந்த துறவி, தன்னை அண்டி வந்த இளைஞர்கள் நன்றாகத் தூக்குகிறார்களா? என்று பார்க்க வந்தார்கள். அங்கே அவர்கள் போர்த்த போர்வையில்லாமல் குளிரில் நடுங்கிகொண்டிருந்தர்கள். அவருக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை. எல்லாருக்கும் போர்த்த போர்வையில்லாத சூழல், குளிர்காயவும் விறகுகள் இல்லாத ஒரு இக்கட்டான் ஒரு சூழ்நிலை. இதையெல்லாம் பார்த்த துறவி, அங்கே இருந்த ஒரு மரத்தால் ஆனா புத்தர் சிலையை உடைத்து, அதில் நெருப்பு மூட்டி, அவர்களைக் குளிர் காயச் சொன்னார். துறவி புத்த சிலையைத் தான் உடைத்து நெருப்பு மூட்டியிருக்கிறார் என்பதை அறிந்த அந்த இளைஞர்கள் அவரைச் சாகும் வரை அடித்துப் போட்டார்கள்.

தங்களுக்காக நல்ல காரியத்தை புரிந்தாலும், அதைப் புரிந்துகொள்ள முடியாத இளைஞர்கள் போக்கு நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஆகவே வாழ்வில் எந்த நிலை வந்தாலும் நாம் நம் ஆண்டவரைப் போன்று, தூய மத்தேயுவைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருப்போம்.

தூய மத்தேயு கடவுள் தனக்குக் கொடுத்த கொடையை மக்களுக்காகக் கொடுத்து, இரக்கத்தின் கருவியாக விளங்கினார். நாமும் நமது திறமைகளை கடவுளின் மகிமைக்காக, மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவோம். இரக்கத்தின் கருவியாக விளங்குவோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


புனித மத்தேயு - செப்டம்பர் 21

நம் நான் இவ்வளவுதான்!


மத்தேயு நற்செய்தியாளரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். வங்கிகளில் பணிபுரிவோர், தணிக்கையாளர்கள், கணக்கர்கள் அனைவரின் பாதுகாவலர் இவர். இந்தப் பணிகளில் இருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துக்களும், செபங்களும்.

இயேசுவைப் பின்சென்ற பன்னிரு திருத்தூதர்களில் வெறும் ஐந்துபேரின் பணி பற்றி மட்டுமே நமக்குத் தெரிகிறது. அந்திரேயா, பேதுரு, யோவான், யாக்கோபு இந்த நால்வரும் மீனவர்கள். மத்தேயு வரிவசூலிப்பவர்.

யூத சமூகத்தில் வரிவசூலிப்பவர்கள் விபச்சாரம் செய்பவர்கள் என்ற அளவில்தான் நடத்தப்பட்டனர். அதாவது, தங்கள் நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துவிட்டு, தங்களை ஆண்டுகொண்டிருக்கும் உரோமை நாட்டிற்கு பிரமாணிக்கம் காட்டியதால் அவர்கள் அவ்வாறு கருதப்பட்டனர். மற்றொரு பக்கம் இந்த வரிவசூலிப்பவர்களுக்கு இரண்டு பக்கமும் கஷ்டம்: வரி வாங்கப் போனால் தங்கள் சொந்த மக்களே அவர்களை தரக்குறைவாகப் பேசுவர். வரி வாங்கவில்லையென்றால் இவர்களுக்கு மேலிருக்கும் உரோமை அரசு இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்.

இப்படி இரண்டு பக்கமும் அடி வாங்கிக் கொண்டிருந்ததால் என்னவோ, 'என்னைப் பின்பற்றி வா!' என்று இயேசு சொன்னவுடன், மத்தேயு உடனே எழுந்து சென்றுவிட்டார்போல!

மத்தேயுவின் உடனடி பின்பற்றுதல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என் மனதின் ஓட்டம் என்னவென்றால் 14 வருடங்கள் குருமடப் பயிற்சி முடித்து, அருட்பொழிவு பெற்ற எனக்கு சில நேரங்களில் 'பின்பற்றுதல்' கடினமாக இருக்கிறது என்பதுதான். ஆனால், தன் குடும்பம், பிள்ளைகள், தன் வேலை, உடன் பணியாட்கள் என இருந்த மத்தேயு எப்படி உடனே சென்றுவிட்டார்? நிற்க.

காலையில் இயேசு மத்தேயு அழைக்கும் நிகழ்வு நடக்கிறது. அதே நாள் மாலையில் மத்தேயுவின் இல்லத்தில் விருந்து ஒன்று நடக்கிறது. முதன்மை விருந்தினர் இயேசுதான். தன்னுடன் வேலை செய்தவர்கள், தன் நண்பர்கள், தன் உறவினர்கள் என அனைவரையும் விருந்திற்கு அழைத்திருக்கிறார் மத்தேயு.

ஒருவேளை இதுதான் மத்தேயுவின் பிரியாவிடை விருந்தோ? அல்லது

இந்த விருந்தின் வழியாக மத்தேயு தன் உள்ளத்து மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தாரா? அல்லது

இந்த விருந்தின் வழியாக, 'ஆண்டவரே! நான் இவ்வளவுதான்! என் குடும்பம், உறவுகள் இவர்கள்தாம்!' என இயேசுவுக்கு அறிமுகம் செய்துவைக்க விழைந்தாரோ?

இந்த மூன்று காரணங்களுமே இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த மூன்று காரணங்களிலும் முதன்மையான காரணம் என்னவாக இருக்குமென்றால், 'இதுதான் நான்!' என்று இயேசுவுக்கு அவர் சொல்ல விழைந்ததுதான்.

இன்று மாலை எங்கள் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய சேன்ட்லர் என்ற ஆஸ்ட்ரிய இறையியல் பேராசிரியர் உரையாற்றிவிட்டு அமர்ந்தார். மிக அழகாக உரையாற்றினார். கேள்வி நேரம் தொடங்கியது. அமர்ந்திருந்த பேராசிரியர்களில் ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். கேள்வி முடிவில் குறுக்கிட்ட சேன்ட்லர், 'எனக்கு கேட்பதில் குறைபாடு இருக்கிறது. யாராவது ஒருவர் என்னிடம் கேள்வியை எழுதிக் காட்டுவீர்களா?' என்று கேட்டார்.

எனக்கு ரொம்ப புல்லரித்துப் போனது. இவ்வளவு பெரிய கூட்டத்தின்முன், 'நான் இவ்வளவுதான்!' என்று சொல்லிவிட இவரால் எப்படி முடிந்தது?

எனக்கு அறிமுகமானவர்களிடம் அல்லது என் நண்பர்களிடம்கூட என் குறைகளை மறைக்க நான் அதிகம் முயற்சிகள் செய்கிறேன். 'நான் இப்படி அல்ல!' என்று சொல்வதிலேயே அல்லது என்னிடம் இருக்கும் குறையை மறைப்பதிலேயே ஆர்வமாயும் இருக்கிறேன். எனக்கு இன்று மத்தேயுவும், சேன்ட்லரும் சவால்களாய் இருக்கிறார்கள்.

'நான் இவ்வளவுதான்!' என்று இறைவனிடம், ஒருவர் மற்றவரிடமும் திறந்து காட்டும் மனநிலை இருந்தால் எத்துணை நலம்!

- அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்.




♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...