Sunday, October 30, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-10-2022)

பொதுக்காலம் 31ஆம் வாரம் - திங்கள்

முதல் வாசகம்

ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.


திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 131: 1. 2. 3

பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.

1
ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. - பல்லவி

2
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. - பல்லவி

3
இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில்

தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



கைமாறு கருதாது உதவி செய்ய்வோமா! 


ஒருமுறை ஒரு சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இது. அவருடைய மகன்   தன்னுடைய பிறந்த நாளன்று வீட்டிலே தனக்கென்று எதுவும் கேட்காமல் வீட்டிலிருந்து சற்று தொலை தூரத்திலுள்ள ஒரு தெருவின் பெயரைச் சொல்லி அங்கு சாலையிலே வசிப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று விரும்பியதாகச் சொன்னார். அச்சகோதரி தன் மகனிடம் தன் வீட்டு அருகிலுள்ளவர்களுக்கே கொடுக்கலாமே என்று கேட்டதற்கு அப்பையன் "இல்லையம்மா. தொலைவில் உள்ளவர்கள் நமக்கு யாரென்று தெரியாது. அருகிலுள்ளவர்களை அடிக்கடி பார்க்க நேரிடும். அப்போது இவர்களுக்கு இதைச் செய்தோம் என்று நினைக்க நேரிடும்." என்று சொன்னதாகக் கூறி தன் மகனின் பரிவுள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்தார்.


அன்புக்குரியவர்களே கைமாறு கருதாமல் உதவும் உள்ளம் இன்று நம்மில் பலரிடம் இல்லாமல் இருக்கும் போது தான் செய்த உதவியை சொல்லிக் காட்டக்கூடாது, அதை நினைவில் கூட வைத்துக்கொள்ளக்கூடாது என எண்ணும் இச்சிறுவனின் குணம் நமக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு அல்ல வா.


வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியக்கூடாது என்று சொன்னார் இயேசு. ஆனால் நாமோ ஊருக்கே சொல்லிவிடுவதோடு "நான் அவனுக்கு அப்படி செய்தேன்.  நான் இவளுக்கு இப்படி உதவினேன். ஆனால் எனக்கு அவள் ஒன்றுமே செய்ததில்லை"என்று பதிலுக்கு உதவிகளையும் அன்பையும் நேரத்த்தையும் என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்.


இம்மனநிலை வேண்டாமென்று நம் ஆண்டவர் கூறுகிறார். விருந்துக்குக் கூட ஏழைகள் ஊனமுற்றோர் என கைமாறு செய்ய இயலாதவர்களை அழைக்கச் சொல்கிறார். செய்த மொய்யை திரும்பப்பெற நிகழ்வுகள் வைக்கும் நமக்கெல்லாம் இது கடினம் தான்.


 நம்முடைய மனநிலையை இன்று இயேசுவின் ஒளியில் ஆராய்வோம். கொடுப்போம். உதவுவோம். அனைத்தையும் திரும்ப எதிர்பார்க்காத மனநிலையோடு. தயாரா?


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! கைமாறு கருதாது அனைவருக்கும் அனைத்தும் கொடுப்பவரே உம்மைப்போல பரிவுள்ளத்தோடு கைமாறு எதிர்பார்க்காமல் உதவும் மனதை எமக்குத் தாரும். ஆமென்.





mUl;gzp. Foe;ij ,NaR ghG

,izg;gq;F gzpahsu;

J}a Mtpahu; Myak;

,uhrrpq;f kq;fsk; gq;F

rptfq;if kiwkhtl;lk;



† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 31)


✠ ரெகென்ஸ்பர்க் நகர் புனிதர் வோல்ஃப்காங்க் ✠
(St. Wolfgang of Regensburg)
தர்மம் செய்பவர் & ரேகன்ஸ்பர்க் நகர ஆயர்:
(The Almoner & Bishop of Regensburg)
பிறப்பு: கி.பி. 934
ஃபுல்லிங்கன், ரியுட்லின்ஜென், ஜெர்மனி
(Pfullingen, Reutlingen, Germany)
இறப்பு: அக்டோபர் 31, 994
புப்பிங், இஃபெர்டிங், ஆஸ்திரியா
(Pupping, Eferding. Austria)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
புனிதர் பட்டம்: அக்டோபர் 8, 1051
திருத்தந்தை ஒன்பதாம் லியோ
(Pope Leo IX)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 31
பாதுகாவல்:
மூளை இரத்தக் கசிவு (Apoplexy), தச்சர்கள் மற்றும் மர வண்டிகள், பக்கவாதம், ரெகென்ஸ்பர்க் (Regensburg), ஜெர்மனி (Germany), வயிறு நோய்கள், பக்கவாதம்
புனிதர் வோல்ஃப்காங்க், கி.பி. 972ம் வருட கிறிஸ்துமஸ் தினம் தொடங்கி, மரிக்கும்வரை “பவேரியா’விலுள்ள” (Bavaria) “ரேகன்ஸ்பர்க்” (Regensburg) மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றியவர் ஆவார். இவர், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இவரை புனிதராக ஏற்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் நன்கு அறியப்பட்ட மூன்று புனிதர்களில் இவர் ஒருவராவார்.
புனிதர் வோல்ஃப்காங்க், தென்மேற்கு ஜெர்மனியின் “ஸ்வாபியா” (Swabia) அமைப்பு குடும்பமொன்றினைச் சார்ந்தவர் ஆவார். “ரெய்செனவ்” (Reichenau Abbey) துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வி கற்றார். இவர் இங்கே கற்கும்போதுதான், “ஹென்றி” (Henry of Babenberg) என்பவரின் நண்பரானார்.
பின்னர், கி.பி. 956ம் ஆண்டு, “டிரையர்” (Trier) உயர்மறைமாவட்ட பேராயராக ஹென்றி நியமிக்கப்பட்டார். பேராயர் ஹென்றியின் அழைப்பை ஏற்று டிரையரிலுள்ள பேராலயப் பள்ளிக்கு கி.பி. 964ம் ஆண்டு, ஆசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அத்துடன், பல எதிர்ப்புகளுக்கிடையே உயர்மறைமாவட்டத்தின் சீர்திருத்தத்திற்காகவும் உழைத்தார். அச்சமயத்தில்தான், தானும் குருவாக வேண்டுமென்று விருப்பம் கொண்டார்.
கி.பி. 964ம் ஆண்டு, பேராயர் ஹென்றியின் மரணத்தின் பின்னர், வோல்ஃப்காங்க் “ஸ்விட்சர்லாந்து” (Switzerland) நாட்டின் “மரியா எய்ன்ஸியேடெல்ன்” (Abbey of Maria Einsiedeln) துறவு மடத்திலுள்ள “பெனடிக்டைன்” (Benedictine order) சபையில் இணைந்தார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து “ஆக்ஸ்பர்க் ஆயர்” (Bishop of Augsburg) புனிதர் “உல்ரிச்” (St. Ulrich) அவர்களால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
கி.பி. 955ம் ஆண்டு, நடந்த “லெக்ஃபீல்ட் போரில்” (Battle of Lechfeld) மோசமான தோல்வியை தழுவிய “ஹங்கேரியர்கள்” (Hungarians), பண்டைய ரோமப் பேரரசின் பிராந்தியமான “பன்னோனியா’வில்” (Pannonia) குடியேறியிருந்தனர். வெகு காலம் வரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறாத இவர்கள், பேரரசுக்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாகவே இருந்தனர். தூய ரோமப் பேரரசின் (Holy Roman Empire) பேரரசர் “முதலாம் ஒட்டோ’வின்” (Emperor Otto I) விருப்பத்தின்படி, ஆயர் “உல்ரிச்” (St. Ulrich) வோல்ஃப்காங்க்கை ஹன்கேரியர்களிடையே சென்று அவர்களுடைய மனமாற்றத்திற்காக மறை போதிக்க கேட்டுக்கொண்டார். ஹன்கேரியர்களிடையே செல்வது ஆபத்தான காரியம் என்று தெரிந்திருந்தும், வோல்ஃப்காங்கின் மறைபோதக திறமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். வோல்ஃப்காங்க், “பன்னோனியா” (Pannonia) சென்று, ஹங்கேரியர்களிடையே மறை போதனை செய்து அவர்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றி சாதனை புரிந்தார்.
கி.பி. 972ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, “ரேகன்ஸ்பர்க்” ஆயர், மிக்கேல்” (Bishop Michael of Regensburg) மரணமடைந்தார். பேரரசரிடமிருந்து ஆயர் நியமனம் பெற்ற வோல்ஃப்காங்க், கி.பி. 972ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆயராக பதவியேற்றார்.
இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண் துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர்.
வாழ்க்கையின் இறுதி காலத்தில் ஆயர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற இவர், வெளிப்படையான ஒரு அரசியல் மோதல் காரணத்தால், “அப்பர் ஆஸ்திரியாவின்” (Upper Austria) பொழுதுபோக்கு பகுதியான “சல்ஸ்கம்மெர்கட்” (Salzkammergut) எனுமிடத்திலுள்ள “வொல்ப்காங்” (Lake Wolfgang) எரிப்பகுதியில் தனிமைத் துறவியாய்ப் போனார். ஒரு வேட்டைக்காரரால் கண்டுபிடிக்கப்பட்ட இவர், மீண்டும் ரேகன்ஸ்பர்க் நகருக்கு கொண்டுவரப்பட்டார்.
ஒருமுறை, “லோவர் ஆஸ்திரியா’வின்” (Lower Austri) “மெல்க்” (Melk) மாவட்டத்திலுள்ள “போச்லர்ம்” (Pöchlarn) எனுமிடத்திற்கு “டனுப்” அல்லது “வோல்கா” (Danube or Volga River) நதியில் பயணிக்கையில் நோய்வாய்ப்பட்டு, “புப்பிங்” (Pupping) எனும் கிராமத்தில் வீழ்ந்தார். அவரது வேண்டுகோளின்படி “செயிண்ட் ஒத்மார் சிற்றாலயம்” (Chapel of Saint Othmar) கொண்டுவரப்பட்ட புனிதர் வோல்ஃப்காங்க், அங்கேயே மரித்தார்.
இவரது உடல் ரேகன்ஸ்பர்க்கில் உள்ள “புனிதர் எம்மரம்” (Crypt of St. Emmeram) நிலவறையில் அடக்கம் செய்யப்பட்டது.
நன்றி : திரு.புஷ்பராஜா
-------------------------------------------------------
† Saint of the Day †
(October 31)
✠ St. Wolfgang of Regensburg ✠
The Almoner:
Born: 934 AD
Died: October 31, 994
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Canonized: October 8, 1051
Pope Leo IX
Feast: October 31
Patronage:
Apoplexy; Carpenters and Wood Carvers; Paralysis; Regensburg, Germany; Stomach Diseases; Strokes
Saint Wolfgang of Regensburg was bishop of Regensburg in Bavaria from Christmas 972 until his death. He is a saint of the Roman Catholic and Eastern Orthodox churches. He is regarded as one of the three great German saints of the 10th century, the other two being Saint Ulrich and Saint Conrad of Constance.
Oct. 31, though best known as the Vigil of the Solemnity of All Saints (All Hallows’ Eve) in the Western church, is also the liturgical feast day of St. Wolfgang of Ratisbon, who was regarded as one of the greatest German saints of his time
The Benedictine monk and bishop, who served as a missionary to pagans and a reformer of the Church in southeastern Germany, was born around 934 in the historic southwestern German region of Swabia.
Wolfgang came from a family of nobility and was privately tutored as a child. Later on, the future monk was educated at the renowned Monastery of Reichenau, and at Wurtzburg. Wolfgang showed intellectual prowess and found companionship during his years of study, but was also dismayed by the petty jealousies and moral lapses he observed in Wurtzburg’s academic environment.
In 956, his school companion Henry was chosen to lead the Archdiocese of Trier. Though Wolfgang had become interested in monastic life, he chose to go with Henry to Trier, where his service to the Church included a teaching position in the cathedral school.
After Archbishop Henry’s death in 964, Wolfgang left Trier, became a monk of the Order of Saint Benedict, and settled at a monastery in the diocese of Augsburg. Its school prospered under his direction, and the local bishop – the future St. Ulrich – ordained him to the priesthood in 968. In his youth, Wolfgang had envisioned a secluded life of contemplation; but things turned out differently, as he was sent east to evangelize the Magyars in 972.
By Christmas of that year, Wolfgang had been chosen as the new Bishop of Ratisbon (present-day Regensburg in Bavaria). But he continued to live out his monastic vocation, retaining his distinctive Benedictine habit and dedicating himself to the same ascetic lifestyle. Amid the work of preaching and reform, Wolfgang remained a man of prayer, silence, and contemplative solitude.
Not surprisingly, the Bishop of Ratisbon made monasticism a focus of his church reforms, reviving religious life in places where it had fallen into disorder. Wolfgang also showed extraordinary care for the poor in his diocese, to such an extent that he was called “the Great Almoner.” On the other hand, he was also involved in affairs of state at a high level and tutored the children of the Duke of Bavaria, including the future Holy Roman Emperor St. Henry II.
Wolfgang, despite being one of the great bishops and saints of his time, still encountered serious difficulties in his leadership of the Diocese of Ratisbon. On one occasion, a political conflict caused him to withdraw from his diocese to a hermitage for a period of time. Wolfgang is also said to have struggled with the great geographical extent of the diocese, parts of which were eventually entrusted to the Bishop of Prague.
In 994, while travelling in Austria, Wolfgang became sick and died in the village of Pupping. Miracles associated with his tomb, including many healings, led to his canonization of 1052. Several of St. Wolfgang’s devotees experienced relief from stomach ailments, and he remains a patron saint of such troubles today. His intercession is also sought by victims of strokes and paralysis, and by carpenters.




♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...