கத்தோலிக்க தூதன் மின்னிதழ் - 07-10-2022
பதிவிறக்கம் PDF கிளிக் செய்யவும்
✠ அதிதூய வியாகுல அன்னை ✠
(Our Lady of Sorrows)
திருவிழா நாள் : செப்டம்பர் 15
பாதுகாவல் :
ஸ்லோவாக்கியா (Slovakia), ஹங்கேரி (Hungary), போலந்து (Poland), மால்ட்டா (Malta), மரியாளின் ஏழு வியாகுலங்கள் (Seven Sorrows of Mary), மிசிசிப்பி (Mississippi), ரோண்டா (Ronda), செபு (Cebu), டனவன் பஸ்டோஸ் (Tanawan Bustos), புலாகன் (Bulacan)
வியாகுல அன்னை என்பது கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியாள் தமது வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இறைவனின் அன்னைக்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது. வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியாள் அதிகம் சித்தரிக்கப்படுகிறார்.
மரியாளின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளது. பொதுவாக, கத்தோலிக்க கலையில் வியாகுல அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும் சித்தரிப்பது வழக்கம். சிமியோனின் (Simeon) இறைவாக்கின் அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பக்தி முயற்சிகளில் அடங்கும்.
“தூய மரியாளின் துயரங்கள்” என்னும் பெயரில் மரியாளுக்கு கத்தோலிக்க திருச்சபையில் பிரதி செப்டம்பர் மாதம் 15ம் நாள் விழா எடுக்கப்படுகின்றது.
மரியாளின் ஏழு துயரங்கள்:
இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.
1. சிமியோனின் இறைவாக்கு:
மரியாளும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரும் குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது, அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்” (லூக்கா 2:34-35) என்று மரியாளிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாளின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
(லூக்கா 2:25-35)
2. குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல்:
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது, குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட சூசையப்பர், மரியாளையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாளுக்கு இது ஒரு வியாகுலம்தான்.
(மத்தேயு 2:13-14)
3. சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல்:
தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், “மரியாள் அடைந்த வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான். ஏனென்றால், மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாளோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாளோடு இல்லை. தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாரோ என மரியாள் நினைத்திருக்கக் கூடும். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்”. தூய லிகோரி சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாளுக்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.
(லூக்கா 2:43- 47)
4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்:
கள்வர்களுக்கும், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியாள் மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.
(லூக்கா 23:27)
5. சிலுவையின் அடியில் துணை நின்றது:
ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாளுக்கு வேதனையிலும் வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கைநெகிழ்ந்தது, இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று மரியாள் மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்.
(யோவான் 19:41,42)
6. இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல்:
எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோன் சொன்ன ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்’ என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியாள் பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாளுக்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.
(யோவான் 19: 40)
7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல்:
இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியாள் அடக்கம் செய்கிறார். உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்? மரியாள் தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாளைப் பொறுத்தளவில் பாடுகள்தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத் துக்கங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.
(யோவான் 19: 41-42)
இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும், கிறிஸ்து கற்பித்த “பரலோக மந்திரம்” (Our Father) ஒருமுறையும், மற்றும் “அருள்நிறைந்த” (Hail Mary) “மங்கள மந்திரம்” ஏழு முறையும் செபிப்பது கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
முதல் வாசகம்
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16a)பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.
தொடர்பாடல்
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 33-35
அக்காலத்தில்
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
முதல் வாசகம்
நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11
சகோதரர் சகோதரிகளே,
உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.
நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்.
அல்லது: அல்லேலூயா.
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
† இன்றைய திருவிழா †

| முதல்: | இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும் |
| எல்: | ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும். |
| தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. | |
| தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா. |
மு. மொ. 1: ஆபிரகாமின் வித்திலிருந்தும் யூதாவின் குலத்திலிருந்தும் தாவீதின் அடிமரத்திலிருந்தும் எழுந்தவருமாகிய மாட்சிமிக்க கன்னிமரியா பிறந்த நாள் இதுவே.
இறைவேட்கை
திபா 63: 1-8
இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆபிரகாமின் வித்திலிருந்தும் யூதாவின் குலத்திலிருந்தும் தாவீதின் அடிமரத்திலிருந்தும் எழுந்தவருமாகிய மாட்சிமிக்க கன்னிமரியா பிறந்த நாள் இதுவே.
மு. மொ. 2: தூய கன்னிமரியா பிறந்தபொழுது உலகனைத்தும் ஒளியால் நிறைந்தது; இத்தகைய பேறுபெற்றக் கன்னியைப் பெற்றெடுத்த அடிமரம் புனிதமும் ஆசியும் பெற்றதுவே.
படைப்பனைத்தின் பாடல்
மு. மொ. : தூய கன்னிமரியா பிறந்தபொழுது உலகனைத்தும் ஒளியால் நிறைந்தது; இத்தகைய பேறுபெற்றக் கன்னியைப் பெற்றெடுத்த அடிமரம் புனிதமும் ஆசியும் பெற்றதுவே.
மு. மொ. 3: தூய கன்னிமரியாவின் பிறப்பை அகமகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்; அவரே நமக்காக ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார்.
புனிதரின் மகிழ்ச்சிப்பா
திபா 149
இறைவனின் புதிய மக்களாம் திருச்சபையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : தூய கன்னிமரியாவின் பிறப்பை அகமகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்; அவரே நமக்காக ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார்.
எசா 61: 10
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன்போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள்போலும் விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நோர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
| முதல்: | மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார். |
| எல்: | மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார். |
| முதல்: | தம் சொந்த உறைவிடத்திலேயே ஆண்டவர் அவரைக் குடியிருக்கச் செய்தார். |
| எல்: | மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார். |
| முதல்: | தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. |
| எல்: | மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார். |
மு. மொ. : கடவுளின் கன்னித்தாயே, உம் பிறப்பு உலகனைத்திற்கும் மகிழ்ச்சியை அறிவித்தது. ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் கதிரவன், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து உதயமானார்; இவரே சாபத்தை ஒழித்து ஆசியைக் கொணர்ந்தார்; சாவை அழித்து எமக்கு நிலைவாழ்வை அளித்தார்.
லூக் 1: 68-79
மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : கடவுளின் கன்னித்தாயே, உம் பிறப்பு உலகனைத்திற்கும் மகிழ்ச்சியை அறிவித்தது. ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் கதிரவன், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து உதயமானார்; இவரே சாபத்தை ஒழித்து ஆசியைக் கொணர்ந்தார்; சாவை அழித்து எமக்கு நிலைவாழ்வை அளித்தார்.
கன்னிமரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நமக்கு விடுதலை அளிப்பவரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம்.
எல்: ஆண்டவரே, உமது அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.
நீதியின் கதிரவனே! அமல உற்பவியான கன்னிமரியாவில் உமது நாளை உதயமாகச் செய்தீர் — உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும்.
என்றும் வாழும் வார்த்தையே! மரியாவின் உயிருள்ள சதையில் நீர் ஓர் உறைவிடத்தை இப்புவியில் கண்டுகொண்டீர் — பாவக் கறையிலிருந்து விடுதலை பெற்ற எங்கள் உள்ளங்களில் என்றும் தங்கியருளும்.
எங்களுக்கு விடுதலை அளிப்பவரான கிறிஸ்துவே! நீர் இறக்கும்போது அருகில் உம் தாயும் இருக்கவேண்டும் எனத் திருவுளம் கொண்டீர் — அவரது பரிந்துரையால் நாங்களும் உமது பாடுகளில் பங்கு பெறுவதில் மகிழ்வோமாக.
அன்புநிறை விடுதலை அளிப்பவரே! சிலுவையில் நீர் தொங்கிய போது உம் தாய் மரியாவை யோவானுக்குத் தாயாகக் கொடுத்தீர் — எங்களது நல் வாழ்க்கையால் நாங்கள் அவரது பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துவோமாக.
ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
| முதல்: | ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக |
| எல்: | ஆமென் |
| முதல்: | இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும் |
| எல்: | ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும். |
| தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. | |
| தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா. |
மு. மொ. 1: ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவது நலம். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.
மீட்படைந்தோரின் பாடல்
திபா 118: 1-9
‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தன்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ (திப 4:11)
Ⅰ
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவது நலம். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.
மு. மொ. 2: ஆண்டவர் என் ஆற்றல். என் பாடல், அல்லேலூயா.
திபா 118: 10-18
Ⅱ
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவர் என் ஆற்றல். என் பாடல், அல்லேலூயா.
மு. மொ. 3: ஆண்டவரே, நீர் என் மன்றாட்டைக் கேட்டதால், நான் உம்மைப் புகழ்வேன், அல்லேலூயா.
திபா 118: 19-29
Ⅲ
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, நீர் என் மன்றாட்டைக் கேட்டதால், நான் உம்மைப் புகழ்வேன், அல்லேலூயா.
கலா 6: 8
தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர். ஆவியாருக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவியார் அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்.
| முதல்: | ஆண்டவரே, உமது வார்த்தை என்றும் நிலைத்துள்ளது. |
| எல்: | உமது உண்மை என்றென்றும் நீடித்திருக்கிறது. |
ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
| முதல்: | ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக |
| எல்: | ஆமென் |
| முதல்: | இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும் |
| எல்: | ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும். |
| தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. | |
| தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா. |
மு. மொ. 1: ஈசாயின் அடிமரத்திலிருந்து கன்னிமரியா பிறந்தார். உன்னதரின் ஆவியார் அவருள் வந்து தங்கினார்.
இறைவேட்கை
திபா 63: 1-8
இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஈசாயின் அடிமரத்திலிருந்து கன்னிமரியா பிறந்தார். உன்னதரின் ஆவியார் அவருள் வந்து தங்கினார்.
மு. மொ. 2: இன்று தூய கன்னிமரியா பிறந்த நாள். கடவுள் அவரது எழிலினைக் கண்ணாக்கினார். தாழ்நிலையில் இருந்த அவரைக் கடவுள் சந்தித்தார்.
படைப்பனைத்தின் பாடல்
மு. மொ. : இன்று தூய கன்னிமரியா பிறந்த நாள். கடவுள் அவரது எழிலினைக் கண்ணாக்கினார். தாழ்நிலையில் இருந்த அவரைக் கடவுள் சந்தித்தார்.
மு. மொ. 3: கடவுளின் அன்னையாம் கன்னிமரியா தூய்மை ஆனவர்; நமது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்; அவர் ஆண்டவரிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரது பிறப்பு நாளை நாம் கொண்டாடுகிறோம்.
புனிதரின் மகிழ்ச்சிப்பா
திபா 149
இறைவனின் புதிய மக்களாம் திருச்சபையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : கடவுளின் அன்னையாம் கன்னிமரியா தூய்மை ஆனவர்; நமது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்; அவர் ஆண்டவரிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரது பிறப்பு நாளை நாம் கொண்டாடுகிறோம்.
கலா 4: 4-5
ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
| முதல்: | அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். |
| எல்: | அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். |
| முதல்: | பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே. |
| எல்: | அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். |
| முதல்: | தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. |
| எல்: | அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். |
மு. மொ. : மாட்சிமிகு கன்னிமரியாவின் தகுதிநிறை பிறப்பை நினைவுகூர்வோமாக. அவரது தாழ்நிலையை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் கருவுற்று உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பார் என்பதை அவருக்கு அறிவிக்க அவரது வானதூதரை அனுப்பினார்.
லூக் 1: 47-55
என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : மாட்சிமிகு கன்னிமரியாவின் தகுதிநிறை பிறப்பை நினைவுகூர்வோமாக. அவரது தாழ்நிலையை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் கருவுற்று உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பார் என்பதை அவருக்கு அறிவிக்க அவரது வானதூதரை அனுப்பினார்.
கன்னிமரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நமக்கு விடுதலை அளிப்பவரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம்.
எல்: ஆண்டவரே, உமது அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.
நீதியின் கதிரவனே! அமல உற்பவியான கன்னிமரியாவில் உமது நாளை உதயமாகச் செய்தீர் — உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும்.
என்றும் வாழும் வார்த்தையே! மரியாவின் உயிருள்ள சதையில் நீர் ஓர் உறைவிடத்தை இப்புவியில் கண்டுகொண்டீர் — பாவக் கறையிலிருந்து விடுதலை பெற்ற எங்கள் உள்ளங்களில் என்றும் தங்கியருளும்.
எங்களுக்கு விடுதலை அளிப்பவரான கிறிஸ்துவே! நீர் இறக்கும்போது அருகில் உம் தாயும் இருக்கவேண்டும் எனத் திருவுளம் கொண்டீர் — அவரது பரிந்துரையால் நாங்களும் உமது பாடுகளில் பங்கு பெறுவதில் மகிழ்வோமாக.
அன்புநிறை விடுதலை அளிப்பவரே! சிலுவையில் நீர் தொங்கிய போது உம் தாய் மரியாவை யோவானுக்குத் தாயாகக் கொடுத்தீர் — எங்களது நல் வாழ்க்கையால் நாங்கள் அவரது பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துவோமாக.
ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
| முதல்: | ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக |
| எல்: | ஆமென் |
| முதல்: | இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும் |
| எல்: | ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும். |
| தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. | |
| தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா. |
மு. மொ. 1: இறைவா, என் உடல் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஆண்டவரே என் உரிமைச் சொத்து
திபா 16
கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தொழச் செய்தார். (திப 2:24)
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : இறைவா, என் உடல் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
1 தெச 5: 23
அமைதி அருளும் கடவுள் தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது, உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!
| முதல்: | ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன். |
| எல்: | ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன். |
| முதல்: | உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே. |
| எல்: | ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன். |
| முதல்: | தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. |
| எல்: | ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன். |
மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.
லூக் 2: 29-32
கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.
எங்கள் ஆண்டவராகிய கடவுளே! இந்நாளில் உழைப்பால் நாங்கள் மிகவே சோர்வடைந்துள்ளோம்; அமைதியான உறக்கத்தால் எங்களைப் புதுப்பித்தருளும். இவ்வாறு, உமது உதவியால் சோர்வு நீங்கிய நாங்கள் உடலாலும் உள்ளத்தாலும் உமக்குப் பணிபுரிவோமா. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz
முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...