Friday, July 2, 2021

14th Ordinary week Sunday - பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

 


Download pdf 

திருப்பலி முன்னுரை: இறையேசுவில் பிரியமானவர்களே,

இன்று, ஆண்டின் பொதுக்காலம் பதின்நான்காம் ஞாயிறை நாம் நம் தாய்த்திருஅவையோடு இணைந்து சிறப்பித்து மகிழ்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தனது சொந்த ஊருக்கு இறைவாக்குரைக்கசெல்கிறார். அவரின் இறைவார்த்தையை கேட்ட மக்கள் வியப்புறுகிறார்கள். ஆனால், அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆதலால், அவர் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இன்றும், இத்தகைய சூழலை   நாம் நமது சமூகத்தில் அன்றாடம் கண்டு கொண்டிருக்கிறோம். அதாவது,  நம்மிடையே இருந்து வளர்ந்த, பண்புள்ள ஒருவரின் அறிவுரையை நாம் ஏற்க மறுக்கிறோம். மேலும், அந்நபரை ஏளனமாகவும் பார்க்கிறோம். சற்று சிந்தித்துப் பார்ப்போம்! இந்நிலையில் நாம் இருந்தால் நம்மை மாற்றிக் கொள்ளவும், சமூகத்தில் இந்நிலை களையப்படவும் வேண்டி இறைவனின் அருளாசீருக்காக வேண்டுவோம். தொடர்ந்து இத்திருப்பலியில் இணைவோம் 

வருகைப் பல்லவி          

கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கக்கைப் பெற்றுக்கொண்டோம்; கடவுளே! உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக்கை நீதியால் நிறைந்துள்ளது.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

(அல்லது)

பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, வீழ்ச்சியுற்ற உலகை உம் திருமகனின் தாழ்ச்சியினால் மீண்டும் நிலைநிறுத்தினீர் அதனால் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து நீர் விடுவித்த உம் நம்பிக்கையாளருக்குப் புனிதப் பேரின்பத்தைத் தந்து அவர்கள் என்றும் நிலையான மகிழ்ச்சி அடைந்திடச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் எசேக்கியலை அழைத்து, தமது ஆவியை அவர் மேல் பொழிந்து, அவரை இறைவாக்கினராக ஏற்படுத்தி, இஸ்ரயேல் மக்களிடையே இறைவாக்குரைக்க அனுப்புகிறார் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.


முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5

அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், “மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்” என்றார். “வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், ‘தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே’ என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.”


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்                 திபா 123: 1. 2. 3-4

பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.

1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.   ℟ 

2 பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.   ℟ 

3 எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.

4 இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும்.       ℟ 


 இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் தனது நிலைமையைப் பற்றி எடுத்துரைக்கிறார். அதாவது, தான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன் என்றும் மேலும் எனது இகழ்ச்சியிலும், இடரிலும், இன்னலிலும், கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன் எனவும் எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 7-10

சகோதரர் சகோதரிகளே!

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்”என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: புனித மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

இறையேசுவில் பிரியமானவர்களே

கால்பந்தாட்டத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஓர் அணியின் நட்சத்திர வீரர் முதல் சுற்றில் உடைந்த உள்ளத்தோடு விளையாடுகிறார.; முயற்சிக்கிறார் முடியவில்லை. அணியின் வீரர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். போடுகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை. கடைசி 45வது நிமிடத்தில் இரண்டாவது சுற்று வந்தது. அவர் கோல் அடிக்க முயற்சிக்கிறார.; கோல் சரியாக போய் விழுந்தது. பிறகுதான் தெரியவந்தது கடைசி சுற்றில் அவரது விளையாட்டை பார்ப்பதற்கு தாய் அங்கு வந்திருந்தார.; அதுதான் அவருக்கு மிகப்பெரிய பலமாக, சக்தியாக மாறியது. வரிசையாக கோல்களை அடித்து தனது அணிக்கு பெருமை சேர்த்தார.; இந்த வெற்றிக்கு காரணம் தாயின் உடனிருப்பு. தாய் சொல்வார், “நான் இருக்கிறேன் பயப்படாதே” என்று. 

கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 14ம் ஞாயிறில்  இருக்கிறோம். நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஆண்டவர் சொல்கிறார.; பயப்படாதே மகனே மகளே நான் உன்னோடு இருக்கிறேன.; மத்தேயு 28: 30ல் வாசிக்கிறோம். இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன.; இன்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில,; இறைவாக்கினர் எசேக்கியேல், கிளர்ச்சியில் ஈடுபட கூடிய இஸ்ரயேல் மக்களிடம் செல்கிறார.; இறைவாக்கு உரைக்க துணிச்சலோடு அவர் போகிறார். ஆண்டவரோடு பேசுகையில் சொல்வார.; “நான் உன்னை அம்மக்களிடம் அனுப்புகிறேன் பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன்” என்ற தைரியம்தான் காரணம். 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அவரது பாணியில் சொல்லும்போது, “என் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இடரிலும், இன்னலிலும், நெருக்கடியிலும், கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஓப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசு என்னோடு இருப்பதே எனக்கு பலம் அது போதும்” என்கிறார். 

மத்தேயு 5:11,12ல் வாசிக்கிறோம.; “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து துன்புறுத்தி உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதது எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்”. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில,; இயேசு தனது சொந்த ஊராகிய நாசரேத்துக்கு இறைவாக்கு உரைக்க செய்கிறார். ஆனால் சொந்த மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. புறக்கணிக்கிறார்கள். இயேசுவுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் ஆனால் உடைந்து போகவில்லை. சுக்குநூறாகி போகவில்லை. ஏனெனில் தனது தந்தையுடன் இருக்கிறார் என்பதை மறந்துவிடவில்லை. யோவான் 16:32ல் “நான் தனியாய் இருப்பதில்லை தந்தை என்னோடு இருக்கிறார்” என்று வாசிக்கிறோம.; மாற்கு4:35-41ல்  இயேசு தனது சீடர்களோடு பயணம் செய்கிறார் படகில் பின்புறமாக தூங்கிக்கொண்டு இருந்தார் சூறாவளி ஏற்படவே சீடர்கள் அஞ்சினார்கள.; இயேசு அவர்களது அலறலை கேட்டு எழுந்து காற்றையும், கடலையும், அடக்கி ஏன் அஞ்சுகிறார்கள் நம்பிக்கை குன்றியவர்களே என்கிறார். இயேசு கூடவே இருந்தும் சீடர்கள் அஞ்சினர். இன்று நம்மையும் பார்த்து நம் ஆண்டவர் இயேசு சொல்கிறார், கேட்கிறார், ‘ஏன் பயப்படுகிறீர்கள் நான் உங்களோடு இருக்கிறேன.; துன்பங்கள் வந்தாலும், துயரங்கள், ஏமாற்றங்கள,; புறக்கணிப்புகள,; வாழ்வில் வந்தாலும், துணிவுடன் முன்னேறிச் செல்லுங்கள். நான் உடன் இருக்கிறேன் என்னோடு என்றும் இணைந்திருங்கள்.’ 1பேதுரு 5:7 “உங்கள் கவலையெல்லாம் ஆண்டவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால,; அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். ஆக துணிவோடு ஆண்டவரது பணியை செய்வோம,; தொடர்ந்து, எழுந்து சோர்வடையாமல் வாழ்வில் பயணிப்போம.; ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பயணிக்கிறார் - ஆமென்

அருட்தந்தை. சில்வஸ்டர், தூத்துக்குடி மறைமாவட்டம்


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்", என்று சொன்ன எம் இறைவா, உமது வார்த்தைக்கினங்க உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மாற்றும் கன்னியர்களை ஆசிர்வதியும். அவர்கள் நீர் காட்டிய அன்பின் பாதையில் மக்களை வழிநடத்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. அனைத்துலகிற்கும் அரசரே எம் இறைவா, எங்கள் நாட்டை ஆள மக்களால் தேர்ந்துகொள்ளப்பட்ட தலைவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம். மக்களுக்காக பணியாற்ற சமூக சிந்தனை உள்ளவர்களாக அவர்கள் மனதை மாற்றி சமூக பணியாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. “உனது நம்பிக்கை உன்னை குணமாகிற்று" என்று சொன்னவரே, தீராத நோயினால் உடலளவிலும் உள்ளத்தளவிலும் துன்புறும் எம் சகோதர சகோதிரிகளுக்காக மன்றாடுகிறோம், நீரே உமது கரத்தினால் அவர்களை தொட்டு உம்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையின் வழியாக குணப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. உழைப்பவர்களை உவமைகளுக்கு எடுத்துக்காட்டாக பயன்படுத்திய எம் இறைவா, எங்கள் சமூகத்தில் உள்ள கடின உழைப்பாளிகளை உம்மிடம் ஒப்படைக்கிறோம். நீரே அவர்களுக்கு உடல், உள்ள, ஆரோக்கியம் தந்து நிறைவான செல்வத்தினால் அவர்கள் குடும்பங்களை ஆசிர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. ஞானத்தின் பிறப்பிடம் எம் இறைவா, எம் சமூகத்தில் வாழும் இளைஞர்கள்,இளம்பெண்கள், குழந்தைகளை உம்மிடம் ஒப்படைக்கிறோம். உம்மைப்போன்று அவர்களும் ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து, தங்கள் தாய் தந்தைக்கு கீழ்ப்படிந்து வாழும் பிள்ளைகளாக வளர அவர்களை ஆசிர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் நேர்ந்தளிக்கும் இக்காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்துவதாக் விண்ணக வாழ்வுக்கு உரிய நற்செயல் புரிவதில் நாங்கள் நாளுக்குநாள் முன்னேறிச் செல்வோமாக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி   

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரில் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர்.

(அல்லது)

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மீட்பு அளிக்கும் கொடைகளை நாங்கள் என்றும் பெற்றுக்கொள்ளவும் உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர் ஜூலை 6  

 புனித மரிய கொரற்றி (மறைசாட்சி)

பிறப்பு : 1890 : அங்கோனா, இத்தாலி

இறப்பு : 1902 

புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்


இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான். 

“இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். “மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். “மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான். 

இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50 ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார். 


செபம்:

இறைவா!  கற்பு என்பது உண்மையிலும், நேர்மையிலும் அடங்கியிருக்கிறது என்பதனை உணர்ந்து இறைவனின் ஆலயமாகவும், தூய ஆவியார் குடி கொள்ளும் இல்லிடமாக வாழ வரம் வேண்டியும், அனைவரையும் அன்பு செய்து கற்பு நெறியோடு நாங்கள் அனைவரும் வாழ வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்


இறை அழைத்தல் பெருக வேண்டுதல்

இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும். இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.

இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும். இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும்.

ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும், ஆண்டவரே. -ஆமென்.

 hவவிள:ஃஃமயவவழடமைமயவரவயn.டிடழபளிழவ.உழஅ


வாட்சப் செய்தி

திரு விவிலியம் கற்றல்


கத்தோலிக்க திருச்சபையின் மக்களாகிய நமக்கு இது மிகவும் முக்கியமானது. நாம் ஏமாற்றப்படுவதே போலி புத்தகத்தை வைத்துதான். இந்த விபரங்கள் நமக்கு தன் தெரியவில்லை என்றால், போலி புத்தகத்தைக் கையில் இலவசமாகத் தந்து நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தைமும் பொருளையும் இந்த அந்தி கிறிஸ்துவின் ஆட்கள் ஏமாற்றி எடுத்து விடுவார்கள். மிகவும் கவனமுடன் செயல்படவேண்டியக் கட்டாயம். ஆகவே முதலில் நம் திருவிவிலியம் இவற்றைக் கொண்டு ள்ளது என்பதை நாம் அறிந்து புரிந்து வைத்திருப்பது கட்டாயம்...


1. பழைய ஏற்பாடு

பொது வினாக்களின் பதில்கள்


1) பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?

46 புத்தகங்கள்


2) பழைய ஏற்பாடு எத்தனை வகைககளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?

நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. திருச்சட்ட நூல்கள்

2. வரலாற்று நூல்கள்

3. ஞான நூல்கள்

4. இறைவாக்கு நூல்கள்


3) திருச்சட்ட நூல்கள் எத்தனை? அவை யாவை?  

திருச்சட்ட நூல்கள்(5):

1. தொடக்கநூல்

2. விடுதலைப் பயணம்

3. லேவியர்

4. எண்ணிக்கை

5. இணைச்சட்டம்


4) வரலாற்று நூல்கள் எத்தனை? அவை யாவை?

வரலாற்று நூல்கள்

1. யோசுவா

2. நீதித்தலைவர்கள்

3. ரூத்து

4. 1சாமுவேல்

5. 2சாமுவேல்

6. 1அரசர்கள்

7. 2அரசர்கள்

8. 1குறிப்பேடு

9. 2குறிப்பேடு

10. எஸ்ரா

11. நெகேமியா

12. எஸ்தர்

13. தோபித்து

14. யூதித்து

15. 1மக்கபேயர்

16. 2 மக்கபேயர்


5) ஞான நூல்கள் எத்தனை? அவை யாவை?

ஞான நூல்கள்

1. யோபு

2. திருப்பாடல்கள்

3. நீதிமொழிகள்

4. சபை உரையாளர்

5. இனிமைமிகுபாடல்

6. சாலமோனின் ஞானம்

7. சீராக்கின் ஞானம்


6) இறைவாக்கு நூல்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?

இறைவாக்கு நூல்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


1. பெரிய இறைவாக்கினர் நூல்கள்

2. சிறிய இறைவாக்கினர் நூல்கள்


7) பெரிய இறைவாக்கினர் நூல்கள் யாவை?

பெரிய இறைவாக்கினர் நூல்கள்

1. எசாயா

2. எரேமியா

3. எசேக்கியேல்

4. தானியேல்

5. புலம்பல்

6. பாரூக்கு


8) சிறிய இறைவாக்கினர் நூல்கள் யாவை?

சிறிய இறைவாக்கினர் நூல்கள்(12):

1. ஓசேயா

2. யோவேல்

3. ஆமோஸ்

4. ஒபதியா

5. யோனா

6. மீக்கா

7. நாகூம்

8. அபக்கூக்கு

9. செப்பனியா

10. ஆகாய்

11. செக்கரியா

12. மலாக்கி



9) பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய புத்தகம் எது?

 திருப்பாடல்கள் (150 அதிகாரங்கள்) 


10) பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய புத்தகம் எது?

ஒபதியா (1 அதிகாரம்)


11) பழைய ஏற்பாட்டின் மத்திய புத்தகம் எது?

 நீதிமொழிகள் 


12) பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய அதிகாரம் எது?

திருப்பாடல்கள் 119 (176 வசனங்கள்)


13) பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய அதிகாரம் எது?

திருப்பாடல்கள் 117 (2வசனங்கள்)


14) பழைய ஏற்பாட்டின் மத்திய அதிகாரம் எது?

யோபு 29


15) பழைய ஏற்பாட்டின் முதல் வசனம் யாது?

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, (தொநூ1:1)


16) பழைய ஏற்பாட்டின் கடைசி வசனம் யாது?

நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்." (மலா4:6)


17) பழைய ஏற்பாட்டின் மத்திய வசனம் யாது?

2குறிப்பேடு 20:17,18


18) பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய வசனம் யாது?

தமிழ் விவிலியம்: தானியேல் 5:23

ஆங்கில விவிலியம்: எஸ்தர் 8:9


19) பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய வசனம் யாது?

தமிழ் விவிலியம்: யோபு 36:1

ஆங்கில விவிலியம்: 1 குறிப்பேடு 1:25


20) பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகம் எது?

 தொடக்கநூல் 


21) பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகம் எது?

 மலாக்கி 


22) பழைய ஏற்பாட்டின் நீளமான பெயர் என்ன?

மகேர் சாலால்  கஸ்பாசு (எசா8:1)


23) முக்காலத்தையும் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) உணர்த்தும் திருப்பாடல்கள் யாவை?  

திருப்பாடல்கள் 21, 22, 23


24) இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைப் பெறுவது குறித்துக் கூறும் புத்தகம் எது?

 யோசுவா 


25) விவிலியத்தின்படி இறக்காதவர்கள் யார்?

1. ஏனோக்கு (தொநூ5:22-24)

2. எலியா (2அர2:11)


26) மிகுந்த ஞானியாகத் திகழ்ந்தவர் யார்?

சாலமோன் (1அர3:9-13)


 

27) மிகுந்த சாந்தகுணமுள்ளவர் யார்?

மோசே (எண்12:3)


28) மிக உயரமான மனிதன் யார்?

கோலியாத் (1சாமு17:4)


29) பூமியில் அதிக வருடங்கள் வாழ்ந்தவர் யார்?

மெத்துசேலா - 969 ஆண்டுகள் (தொநூ5:27)


30) ஆபத்து காலத்தில் ஆண்டவரை அழைக்கும் தொலைபேசி எண் எனக் குறிப்பிடப்படும் வசனம் யாது?

ஆண்டவரின் தொலைபேசி எண் எனக் குறிப்பிடப்படும் எண்: 333


என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.

(எரே33:3)

31) உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும்  புத்தகம் எது?

 திருவிவிலியம் 


32) உலகிலேயே இறைவாக்குரைத்த ஒப்பற்ற புத்தகம் எது?

 திருவிவிலியம் 


33) சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புத்தகம் எது?

 திருவிவிலியம் 


“மைக்ரோபார்ம்" என்ற முறையில் முழு விவிலியமும் சிறிய அளவில் பதிக்கப்பட்டு சந்திரனில் வைக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆராய்ச்சி செய்யச் சென்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கும் முன் பூமி உருவாக்கப்பட்ட விதத்தை விவிலியத்திலிருந்து வாசித்தார்கள். 


அதாவது தொடக்கநூல் 1:1 "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்." என்ற பகுதியை வாசித்தபின்பே சந்திரனில் தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள்.ழூ


34) உலகின் பல சட்டங்கள் எந்த புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டன?

 திருவிவிலியம் 


35) உலகிலேயே அதிகமாக அச்சிடப்படுவதும், விற்பனையாவதுமான புத்தகம் எது?

 திருவிவிலியம் 


36) உலகிலேயே அதிகமாகப் படிக்கப்படும் புத்தகம் எது?

 திருவிவிலியம் 


37) உலகிலேயே அதிகமாக ஆராய்ச்சி செய்யப்படும் புத்தகம் எது?

 திருவிவிலியம் 


38) நமக்கு அறிவு, மகிழ்ச்சி, சமாதானம், மனமாற்றம், மீட்பு தரும் ஒப்பற்ற புத்தகம் எது?

 திருவிவிலியம் 


39) விவிலியத்தில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

பழைய ஏற்பாடு 929

இணைத்திருமுறை நூல்கள் 137

புதிய ஏற்பாடு 260

1326 அதிகாரங்கள்

இணைத்திருமுறை நூல்களில் எஸ்தர் (கி) மற்றும் தானியேல் (இ) பழைய ஏற்பாட்டில் ஏற்கனவே உள்ளதால் இந்நூலை மீண்டும் கணக்கில் கொள்வதில்லை.


40) விவிலியத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? வகைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மனப்பாடமாக எழுதுக.

விவிலியத்தில் உள்ள மொத்த புத்தகங்கள் : 73

பழைய ஏற்பாடு:

புதிய ஏற்பாடு: 27

1. பழைய ஏற்பாடு(46):


1. திருச்சட்ட நூல்கள்(5):

1. தொடக்கநூல்

2. விடுதலைப் பயணம்

3. லேவியர்

4. எண்ணிக்கை

5. இணைச்சட்டம்


2. வரலாற்று நூல்கள்

1. யோசுவா

2. நீதித்தலைவர்கள்

3. ரூத்து

4. 1 சாமுவேல்

5. 2 சாமுவேல்

6. 1 அரசர்கள்

7. 2 அரசர்கள்

8. 1 குறிப்பேடு

9. 2 குறிப்பேடு

10. எஸ்ரா

11. நெகேமியா

12. எஸ்தர்

13. தோபித்து

14. யூதித்து

15. 1 மக்கபேயர்

16. 2 மக்கபேயர்


3. ஞான நூல்கள்

1. யோபு

2. திருப்பாடல்கள்

3. நீதிமொழிகள்

4. சபை உரையாளர்

5. இனிமைமிகுபாடல்

6. சாலமோனின் ஞானம்

7. சீராக்கின் ஞானம்


4. இறைவாக்கு நூல்கள்

1. எசாயா

2. எரேமியா

3. புலம்பல்

4. எசேக்கியேல்

5. தானியேல்

6. ஓசேயா

7. யோவேல்

8. ஆமோஸ்

9. ஒபதியா

10. யோனா

11. மீக்கா

12. நாகூம்

13. அபக்கூக்கு

14. செப்பனியா

15. ஆகாய்

16. செக்கரியா

17. மலாக்கி

18. பாரூக்கு


2. புதிய ஏற்பாடு(27):

1. நற்செய்தி நூல்கள்(4):

1. மத்தேயு

2. மாற்கு

3. லூக்கா

4. யோவான்


2.திருத்தூதர் பணிகள்


3. பவுல் அடியாரின் திருமுகங்கள்

1. உரோமையர்

2. 1 கொரிந்தியர்

3. 2 கொரிந்தியர்

4. கலாத்தியர்

5. எபேசியர்

6. பிலிப்பியர்

7. கொலோசையர்

8. 1 தெசலோனிக்கர்

9. 2 தெசலோனிக்கர்

10. 1 திமொத்தேயு

11. 2 திமொத்தேயு

12. தீத்து

13. பிலமோன்

14. எபிரேயர்


4. பொதுத் திருமுகங்கள்(7):

1. யாக்கோபு

2. 1 பேதுரு

3. 2 பேதுரு

4. 1 யோவான்

5. 2 யோவான்

6. 3 யோவான்

7. யூதா


5. திருவெளிப்பாடு


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...