Wednesday, September 7, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (8-09-2022)

 † இன்றைய புனிதர் †

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை)




† இன்றைய திருவிழா †
(செப்டம்பர் 8 )
✠ அதிதூய கன்னி மரியாளின் பிறப்பு ✠
(The Nativity of the Blessed Virgin Mary)
"தூயவர், பாவமற்றவர், அமலோற்பவி, அசல் பாவமற்றவர்"
(Pure, Sinless, Immaculate, Without Original Sin)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
திருவிழா: செப்டம்பர் 8 (உலகளாவியது)
மரியாளின் பிறப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளின் பிறந்த நாளைக் குறிக்கிறது. திருமுறை சாராத கி.பி. 2ம் நூற்றாண்டு நூலான யாக்கோபின் முதல் நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் சுவாக்கின் - அன்னா என்று அறிந்து கொள்கிறோம். மரியாளின் பிறப்பு விழா செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
யாக்கோபு நற்செய்தி:
கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாக்கோபின் முதல் நற்செய்தி, கன்னி மரியாளின் பிறப்பைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறது:
எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியாள் (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.
மரியாளுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாளை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்வி சாலையில், மரியாள் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியாள் ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.
கிறிஸ்தவ மரபு:
மரியாளின் பிறப்பு பற்றி யாக்கோபின் முதல் நற்செய்தியில் காணப்படும் செய்தியே, திருச்சபையின் மரபாக இந்நாள் வரை நிலைத்திருக்கிறது. அத்துடன் மரியாளின் பிறப்பு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பழங்காலம் முதலே நம்பப்படுகிறது. இறைமகன் இயேசுவின் தாயாகுமாறு, அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உருவானபோதே பிறப்புநிலைப் பாவமின்றி உற்பவித்ததாக கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.
✞ மரியன்னையின் பிறப்புவிழா:
நிகழ்வு:
ஒரு சமயம் இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப் போர் நடைபெற்றபோது, இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக் கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின் அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: “போர் நிமித்தமாக உங்களது மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா?” அதற்கு அந்தத் தாய் பதில் எழுதினாள்: “மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர் முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என் உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்”.
இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம் கொண்டான்.
தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை.
வரலாற்றுப் பின்னணி:
மரியாவின் பிறப்பைக் குறித்து கி.பி. 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட – திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத – தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.
மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், “உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்” என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியாள் எனப் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.
மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பாவக்கறை சிறிதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியாள் கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி. 330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருச்சபை வழக்கமாக புனிதரின் – தூயவரின் – இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியாள் ஆகியோர் ஆவர். இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியாள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியாள் பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்:
இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.
தேவையில் இருப்போருக்கு இரங்குதல்:
மரியாள் தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை கடந்து உதவச் செல்கிறார். இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச் செல்கிறார். இவற்றையெல்லாம் மரியாள் யாரும் கேட்காமல் தாமாகவே சென்றுசெய்கிறார். மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின் – கடவுளின் அன்புப் பிள்ளைகளாக - மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான். “நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன். மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் குரு அவனிடத்தில் சொன்னார், “உன்னால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும்” என்றார்.
ஆம், தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில் மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்.
கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்:
மரியாள் எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல் மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும், பின்னர் “இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி ஆகட்டும்” என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய் கையளிக்கின்றார். ஒருவேளை மரியாள் மட்டும் வானதூதரின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு மீட்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதே உண்மை.
இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா, அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
தாழ்ச்சி:
மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.
ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு பெருகுவதை விடவும், ஆணவம் என்ற துர்பண்புதான் அதிகமாகப் பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம். நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்”. இது எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது அழிவுதான் உறுதி.
ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். “முதலில் மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார்”. படித்தவர் அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம் வந்து, “கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருக்கிறேன்” என்றார். அதற்கு குரு, “முதல் நாளே உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது” என்றார். எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.
அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல், தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.
ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
------------------------------------------------------------------------
† Feast of the Day †
(September
😎
✠ The Nativity of the Blessed Virgin Mary ✠
Pure, Sinless, Immaculate, Without Original Sin:
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Oriental Orthodox Churches
Anglican Communion
Feast Day: September 8
The Nativity of the Blessed Virgin Mary, the Nativity of Mary, or the Birth of the Virgin Mary, refers to a Christian feast day celebrating the birth of the Blessed Virgin Mary.
The modern canon of scripture does not record Mary's birth. The earliest known account of Mary's birth is found in the Protoevangelium of James (5:2), an apocryphal text from the late second century, with her parents known as Saint Anne and Saint Joachim.
In the case of saints, the Church commemorates their date of death, with Saint John the Baptist and the Virgin Mary as the few whose birth dates are commemorated. The reason for this is found in the singular mission each had in salvation history, but traditionally also because these alone (besides the prophet Jeremiah, Jer 1:5) were holy in their very birth (for Mary, see Immaculate Conception; John was sanctified in Saint Elizabeth's womb according to the traditional interpretation of Lk 1:15).
Devotion to the innocence of Mary under this Marian title is widely celebrated in many cultures across the globe.
Comments:
We can measure the immense finesse of the Church in dealing with everything when we consider that the only saint with a special feast for her birthday is Our Lady. We are not considering Christmas, of course. This corresponds to the worship of hyperdulia that the Church reserves for her.
The Church reserves the worship of latria, or adoration, only for God - for Our Lord Jesus Christ, therefore, Who is the Word Incarnate. The worship of dulia, or veneration, the Church assigns to the saints. But to Our Lady, she has worship that is neither the simple worship of dulia nor the supreme worship of latria, but rather the worship of hyperdulia, which is a higher veneration unparallel to any other.
So, we have a feast celebrating the birthday of the Holy Virgin, one of the many feasts the Church reserves for her.
Analogously, because of her singular virtue, the Church permits that a church can have more than one statue of Our Lady at the same altar, a rule that does not apply to any other saint. In this way she makes it understood that Our Lady is beyond comparison with any other creature. It is a liturgical way to teach the theological truth that she is the Mother of God.
The feast day of the nativity of Our Lady induces us to ask: What advantage did her birth bring for mankind? And why should mankind celebrate her nativity in a special way?
In the order of nature, Our Lady was conceived without original sin, giving her a singular and peerless value. She was a lily of incomparable purity and beauty that appeared in the night of this land of exile. She also had all the natural psychological gifts that a woman can have. God gave her the richest personality imaginable. To this, He added gifts of the supernatural order, the treasures of graces that were hers. She received the most precious graces God ever gave to any human creature.
Given that she was without original sin, she had the entire use of reason from the moment she was conceived. Therefore, already in the maternal womb, Our Lady had very elevated thoughts. The womb of St. Anne was for her a kind of temple. There she was already interceding for the human race and had begun to pray – with the highest wisdom that was a gift from God – for the coming of the Messiah. In reality, she was influencing the destiny of mankind as a source of graces. Scripture tells us that the tunic that Our Lord wore was a source of grace that cured those who touched it; this being the case, you can imagine how Our Lady, the Mother of the Savior, was a source of graces for whosoever would approach her, even before she was born. For this reason, we can say that at her nativity, immense graces began to shine for mankind and the Devil started to be smashed. He perceived that his sceptre had been cracked and would never be the same again.
At the time of her birth, the world was laid grovelling in the most radical Paganism. Vices prevailed, idolatry dominated everything, abomination had penetrated the Jewish religion itself, which was a presage of the Catholic Religion. The victory of evil and the Devil seemed almost complete. But at a certain moment, God in His mercy decreed that Our Lady should be born. This was the equivalent of the beginning of the destruction of the reign of the Devil.
Our Lady was so important that her birthday marks a new era in the Old Covenant. The History of the Old Covenant was a long wait for the coming of the Messiah. After the original sin of our first parents, mankind had to wait 3,000 years, perhaps more, for the Messiah. But at a certain blessed moment, Divine Providence decreed that a woman should be born who would deserve the coming of the Messiah. Her nativity represents the entrance into the world of the perfect creature who found grace before God and had merit sufficient to end that extensive wait.
All the prayers, sufferings, and faithfulness of the just men living and dead reached their apex with her arrival. There had been Patriarchs, Prophets, just men among the Chosen People and certainly some just men among the Gentiles who had prayed, suffered, and waited; none of this was sufficient to attract the coming of the Redemption. But when God so willed it, He made the perfect creature be born to be the Mother of the Savior. Therefore, the entrance of this exquisite creature into the world marks the presage of the Redemption. The relationship between God and man began to change, and the gates of Heaven that had been tightly locked were semi-opened, permitting the light and breeze of hope to pass through.
Her birth represents the entrance into the world of new grace, a new blessing, a new presence that was an incomparable presage of the presence, blessing, and grace that would come with the Savior.
For all these reasons the Feast of the Nativity of Our Lady should be most dear to us. It is the event that announces the fall of Paganism.
Since we are sons of Our Lady not by our own merit but by her choice, on this day we can ask of her a special grace. Many mystics who had visions of Our Lady said that on her feast days she visits Purgatory to release a great number of souls whom she takes back with her to Heaven. What happens with the Church Suffering gives us an idea of what takes place with the Church Militant. On these feast days, her grace envelops us and gains innumerable favours for us.
I suggest that on her nativity each one of us ask her the graces that we need. But I also suggest that as counter-revolutionaries, we ask her to give us love and ardent desire for the Reign of Mary similar to the desire she had for the Messiah. A wise and reflective desire that cleanses our souls of any attachment to this revolutionary world and allows us to be her tools for the destruction of the Revolution and implantation of her Reign.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira

 நிகழ்வு


ஒரு சமயம் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப் போர் நடைபெற்றபோது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக் கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின் அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: “போர் நிமித்தமாக உங்களது மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா?”. அதற்கு அந்தத் தாய் பதில் எழுதினாள்: “மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர் முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என் உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்”.

இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம் கொண்டான்.

தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை.


வரலாற்றுப் பின்னணி

மரியாவின் பிறப்பைக் குறித்து 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட – திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத – தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.

மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், “உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்” என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியா எனப் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியா அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.


திருச்சபை வழக்கமாக புனிதரின் – தூயவரின் – இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியா. இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியா பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.


தேவையில் இருப்போருக்கு இரங்குதல்

மரியா தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை கடந்து உதவச் செல்கிறார். இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச் செல்கிறார். இவற்றையெல்லாம் மரியா யாரும் கேட்காமல் தாமாகவே சென்றுசெய்கிறார். மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின் – கடவுளின் அன்புப் பிள்ளைகளாக - மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான். “நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன். மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் குரு அவனிடத்தில் சொன்னார், “உன்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும்” என்றார்.

ஆம், தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில் மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்.


கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்

மரியா எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல் மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும், பின்னர் “இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி ஆகட்டும்” என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய் கையளிக்கின்றார். ஒருவேளை மரியா மட்டும் வானதூதரின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு மீட்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதே உண்மை.

இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.


தாழ்ச்சி

மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு பெருகுவதை விடவும், ஆணவம் என்ற துர்பண்புதான் அதிகமாகப் பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம். நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்”. இது எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது அழிவுதான் உறுதி.

ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். “முதலில் மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார்”. படித்தவர் அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம் வந்து, “கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருக்கிறேன்” என்றார். அதற்கு குரு, “முதல் நாளே உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது” என்றார். எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.

அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல், தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.

ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்

பாளையங்கோட்டை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...