Friday, September 16, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (17-09-2022)

 † இன்றைய புனிதர் †



(செப்டம்பர் 17)
✠ புனிதர் இராபர்ட் பெல்லார்மின் ✠
(St. Robert Bellarmine)
ஆயர், ஒப்புரவாளர், மறைவல்லுநர்:
(Bishop, Confessor and Doctor of the Church)
பிறப்பு: அக்டோபர் 4, 1542
மோன்ட்டெபுல்சியானோ, இத்தாலி
(Montepulciano, Italy)
இறப்பு: செப்டம்பர் 17, 1621 (வயது 78)
ரோம் நகரம், இத்தாலி
(Rome, Italy)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அருளாளர் பட்டம்: மே 13, 1923
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம்: ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)
முக்கிய திருத்தலங்கள்:
புனித இஞ்ஞாசியார் ஆலயம், ரோம் நகரம், இத்தாலி
(Chiesa di Sant'Ignazio, Rome, Italy)
திருவிழா: செப்டம்பர் 17
பாதுகாவல்:
பெல்லார்மின் பல்கலைக்கழகம் (Bellarmine University); பெல்லார்மின் ஆயத்த பள்ளி (Bellarmine Preparatory School); ஃபேர்பீல்ட் பல்கலைக்கழகம் (Fairfield University); திருச்சபை அதிகாரிகள் (Canonists); திருச்சபை சட்ட வழக்குரைஞர்கள் (Canon lawyers); வேதியர்கள்; சின்சினாடி உயர் மறைமாவட்டம் (Archdiocese of Cincinnati), ஆயர் இராபர்ட் பேரோன் (Bishop Robert Barron)
புனிதர் ராபர்ட் பெல்லார்மின், ஒரு இத்தாலிய இயேசு சபைத் துறவியும் (Jesuit), கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலும் (Cardinal) ஆவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களுல் ஒருவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI), 1930ம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டமளித்தார். அடுத்தவருடமே இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். இவரின் நினைவுத் திருவிழா நாள் 17 செப்டம்பர் ஆகும்.
இறையியல் பேராசிரியரான இவர், பின்னர் ரோமன் கல்லூரியின் (Roman College) அதிபராகவும் பணியாற்றினார். 1602ம் ஆண்டு, “கபுவா” (Capua) உயர்மறைமாவட்ட்டத்தின் பேராயராகவும் (Archbishop) பொறுப்பேற்றார். வடக்கு இத்தாலியின் “ட்ரென்ட்” மற்றும் போலோக்னா” (Trento and Bologna) ஆகிய இடங்களில் நடந்த கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய மாநாடுகளில் ஒன்றான “ட்ரென்ட் மாநாட்டில்” (Council of Trent) எடுக்கப்பட்ட சீர்திருத்த தீர்மானங்களை ஆதரித்தார்.
இத்தாலியின் “மோன்ட்டெபுல்சியானோ” (Montepulciano) எனும் நகரில், உன்னத பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த பெல்லார்மினுடைய தந்தை “வின்சென்ஸோ பெல்லார்மினோ” (Vincenzo Bellarmino) ஆவார். இவரது தாயார், திருத்தந்தை “இரண்டாம் மார்செல்லஸ்” (Pope Marcellus II) அவர்களின் சகோதரியான “சின்ஸியா செர்வினி” (Cinzia Cervini) ஆவார்.
1560ம் ஆண்டு, ரோம் நகரிலிருந்த இயேசு சபையின் புகுமுக துறவியாக இணைந்தார். மூன்று வருடங்கள் அங்கிருந்த அவர், வடமேற்கு இத்தாலிய பிராந்தியமான “பியேட்மான்ட்” (Piedmont) எனுமிடத்தின் “மாண்டவி” (Mondovì) எனுமிடத்திலுள்ள இயேசுசபை இல்லத்திற்கு கிரேக்கம் கற்க சென்றார். அங்கிருக்கையில், இயேசுசபையின் பிராந்திய தலைவரான (Provincial Superior) ஃபிரான்செஸ்கோ அடர்னோ” (Francesco Adorno) அவர்களின் கவனத்திற்கு ஈர்க்கப்பட்டு, “பதுவை பல்கலை” (University of Padua) சென்றார்.
பதுவை நகரில் முறையாக இறையியல் கற்ற பெல்லார்மின், 1569ம் ஆண்டு, கல்வியை பூர்த்தி செய்வதற்காக “ஃபிலாண்டேர்ஸ்” (Flanders) நகரிலுள்ள “லியூவேன்” பல்கலைக்கு (University of Leuven) அனுப்பப்பட்டார். அங்கேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், பேராசிரியராகவும் மறைபோதகராகவும் புகழ் பெற்றார். ஏழு வருடங்கள் அங்கேயே வசித்த அவர், தமது பலவீனமான உடல்நிலை காரணமாக, 1576ம் ஆண்டு இத்தாலி பயணித்தார். அங்கேயே தங்கிய இவர், திருத்தந்தை “பதின்மூன்றாம் கிரகொரியால்” (Pope Gregory XIII) புதிய ரோமன் கல்லூரியில் (New Roman College) இறையியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
பெல்லார்மின், 1589ம் ஆண்டுவரை இறையியல் பேராசிரியராக பணியாற்றினார். அதே வருடம், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் “மூன்றாம் ஹென்றி” (Henry III of France) கொலை செய்யப்பட்டார். திருத்தந்தை “ஐந்தாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus V) இத்தாலிய கர்தினால் “என்ரிகோ சேடனி” (Enrico Caetani) என்பவரை, ஃபிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க அதிகார சபையுடன் (Catholic League of France) திருத்தந்தையின் தூதராக பேச்சுவார்த்தை நடத்த, பாரிஸ் அனுப்பினார். அவருடன் பேச்சுவார்த்தையில் துணையாக இறையியல் அறிஞராக பெல்லார்மின் தேர்வு செய்யப்பட்டார். அவர், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் நான்காம் ஹென்றியின் (Henry of Navarre) முற்றுகையின்போது அங்கே இருந்தார்.
பெல்லார்மின் 1592ம் ஆண்டு “ரோமன் கல்லூரியின்” (Roman College) அதிபராக நியமிக்கப்பட்டார். 1598ம் ஆண்டு, “ஆயர்களின் ஆய்வாளராக” (Examiner of Bishops) நியமிக்கப்பட்டார். 1599ம் ஆண்டு, கர்தினாலாக நியமிக்கப்பட்டார். அவர் கர்தினாலாக நியமிக்கப்பட்டதும், திருத்தந்தை “எட்டாம் கிளமென்ட்” (Pope Clement VIII) அவரை கர்தினால் விசாரணை குழுவின் நீதிபதிகளுள் ஒருவராக (Cardinal Inquisitor) நியமித்தார். இக்குழு, கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கொள்கை மற்றும் நடவடிக்கையில் (Heresy) ஈடுபடுவோரை விசாரிப்பதற்காக நிறுவப்பட்டதாகும்.
1602ம் ஆண்டு “கபுவா” (Capua) உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட பெல்லார்மின், பன்மைத்துவம் (Pluralism) மற்றும் தமது மறைமாவட்டங்களுக்குள் வசிக்காத ஆயர்களுக்கெதிராக எழுதினர்.
வயதான பெல்லார்மின், ரோம் நகரின் “தூய அந்திரேயா இயேசுசபை கல்லூரியில்” (Jesuit college of St. Andrew) ஓய்வு பெற்றார். 78 வயதான பெல்லார்மின், 1621ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் தேதி மரித்தார்.
நன்றி : திரு புஷ்பராஜா
-------------------------------------------------------------
† Saint of the Day †
(September 17)
✠ St. Robert Bellarmine ✠
Bishop, Confessor and Doctor of the Church:
Born: October 4, 1542
Montepulciano
Died: September 17, 1621 (Aged 78)
Jesuit college of St. Andrew in Rome
Venerated in: Catholic Church
Beatified: May 13, 1923
Pope Pius XI
Canonized: June 29, 1930
Pope Pius XI
Major shrine: Chiesa di Sant'Ignazio, Rome, Italy
Feast: September 17
Patronage:
Bellarmine University; Bellarmine Preparatory School; Fairfield University; Bellarmine College Preparatory; Canonists; Canon Lawyers; Catechists; Robert Barron (Bishop); Catechumens; Archdiocese of Cincinnati.
Saint Robert Bellarmine, S.J. was an Italian Jesuit and a Cardinal of the Catholic Church. He has canonized a saint in 1930 and was named Doctor of the Church, one of only 36. He was one of the most important figures in the Counter-Reformation.
He was a professor of theology and later rector of the Roman College, and in 1602 became Archbishop of Capua. Bellarmine supported the reform decrees of the Council of Trent.
The Italian theologian and Jesuit St. Robert Bellarmine was a cardinal, an adviser to popes, and a strong defender of the Roman Catholic position in the controversies stemming from the Protestant Reformation.
Robert Bellarmine was born on Oct. 4, 1542, in Montepulciano. As a young man of 18, he entered the Jesuits and underwent that group's rigorous intellectual training and discipline. After he was ordained a priest in 1570, he was assigned to teach theology at the University of Louvain, then one of the centres of Roman Catholic defensive scholarship against the Reformation. The young, talented, and religiously sincere Jesuit quickly became known for his effective presentation of Roman Catholic beliefs. He was brought to Rome in 1576 to lecture at the new Jesuit College. He worked there for 12 years to consolidate the Church's theological positions, and out of this research came his most important publication, the three-volume Disputations on the Controversies about the Christian Faith against the Heretics of This Time.
When Bellarmine was 50, he was made rector of the Jesuit College in Rome. Two years later, in 1594, he was appointed provincial superior of the Jesuits in Naples. Pope Clement VIII brought him back to Rome in 1597 to be his personal theological adviser and 2 years later made him a cardinal. In 1602 he was sent to Capua as archbishop but in 1605 was recalled to Rome, where he spent the rest of his life as a respected papal counsellor.
Bellarmine was active in many areas of intellectual life. In 1610 he wrote a book defending the power of the pope. His careful thinking on the natural rights of men had a wide influence on political philosophy for the next 200 years. When Galileo's theories of the earth revolving around the sun created a sensation, Bellarmine advised that they are withheld until they could be more solidly proved. It was the 75-year-old cardinal's sad task to tell Galileo later that the Office of the Inquisition had found his theories opposed to the Bible.
During his long career as a theologian and churchman, Bellarmine was consistently highly regarded. He was a man of strong self-control, putting aside his own feelings in the interest of his duty to the Church. He was kind and particularly concerned about the poor. It was discovered at his death in 1621 that he had quietly given away all his money; there was not even enough left to pay for his funeral. In 1930 Robert Bellarmine has canonized a saint of the Roman Catholic Church.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...